Lokesh Kanagaraj - பத்து படங்கள்தான் அதுக்கு மேல இல்ல.. கன்ஃபார்ம் செய்த லோகேஷ் கனகராஜ்
சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ் ) பத்து படங்களுக்கு மேல் இயக்கமாட்டேன் என லோகேஷ் கனகராஜ் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியை அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இதுவரை அவர் இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட். குறிப்பாக விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தற்போது அவர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
லியோ ரிலீஸ்: இதற்கும் முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய நான்கு படங்கள் போலவே இந்தப் படமும் ஹிட்டாகும் என்று நம்பிக்கையில் இருக்கின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமின்றி விக்ரம் படம் மெகா ஹிட்டானதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்தப் படத்தை முடித்துவிட்டு கைதி 2, ரஜினியுடன் ஒரு படம் என கமிட்டாகியிருக்கிறார் லோகேஷ்.

மோஸ்ட் வாண்டட்: லோகேஷ் கனகராஜ் தான் தற்போது மோஸ்ட் வாண்டட் இயக்குநர். அவரது படத்தில் சில சீன்களில் நடித்துவிட்டாலே ஃபேமஸ் ஆகிவிடலாம் என நடிகர்கள் நினைக்கின்றனர். எனவே இன்னும் பல வருடங்களுக்கு லோகேஷின் இடத்தை அசைக்க முடியாது என ரசிகர்கள் கூறினர். ஆனால் அவரோ மொத்தமே பத்து படங்கள்தான் இயக்குவேன் என கூறியிருந்தார்.
லோகேஷ் பேட்டி: லோகேஷ் கனகராஜ் சும்மா சொல்கிறார் என அவரது ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அதனை தற்போது மீண்டும் ஒரு பேட்டியில் உறுதி செய்திருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் பத்து படங்கள்தான் பண்ணுவேன் அதற்கு மேல் பண்ணமாட்டேன் என முன்னர் சொல்லியிருந்தேன். அந்த சமயத்தில் சில விழாக்களுக்கு சென்றேன். அப்போது என்னுடைய ஃபேவரைட் இயக்குநர்கள் என்னிடம் நீ இப்படி சொல்லாதே என்று கூறினர். அதனால் அப்படி சொல்வதை நிறுத்திவிட்டேன்.
பத்து படங்கள்தான்: பத்து படங்கள் செய்துவிட்டு வேறு ஏதாவது புதிதாக செய்ய வேண்டும். நான் எப்போதுமே கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட்தான். என்னை கொண்டு வந்து ஒரு பொசிஷனில் உட்காரவைத்திருக்கிறார்கள். அதை என்னால் ஹேண்டில் செய்ய முடியவில்லை. கைதி 2 உறுதியாக வருகிறது. ரஜினி சாருடன் படம் செய்கிறேன். மாநகரம் படத்தின் ஷூட்டிங்கை 2015ல் முடித்தோம். ஆனால் படம் 2017ஆம் ஆண்டுதான் ரிலீஸ் ஆனது. அந்த இடைப்பட்ட காலத்திலும், ஆரம்பத்திலும் எழுதிய கதைகளைத்தான் இப்போது சினிமாவாக எடுக்கிறேன். ரஜினி சார் படத்துக்கான கதைகூட அந்த சமயத்தில் எழுதியதுதான்'' என்றார்.


Click it and Unblock the Notifications











