Lokesh Kanagaraj - தலைவர் 171 கதையை கேட்டு விஜய் கொடுத்த ரியாக்ஷன் இதுதான்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன சீக்ரெட்
சென்னை: Thalaivar 171 (தலைவர் 171) தலைவர் 171 கதையை கேட்டுவிட்டு விஜய் கொடுத்த ரியாக்ஷன் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார்.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து இயக்கிய படங்கள் அத்தனையுமே ஹிட்டடித்திருக்கின்றன. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவரது கிராஃபை உச்சத்துக்கு கொண்டு சென்றது. விக்ரம் படம் கொடுத்த கிரேஸால் அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் வெயிட் பண்ணவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

லியோ: அவர் ஐந்தாவது படமாக லியோ படத்தை இயக்கியிருக்கிறார். இதில் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்துக்கான டிக்கெட் ப்ரீ புக்கிங் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. கண்டிப்பாக இந்தப் படமும் விக்ரம் படம் போலவே மெகா ஹிட்டடிக்கும் என்று திரைத்துறையில் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.
எல்சியூ: அதேபோல் லோகேஷ் கனகராஜ் எல்சியூ என்ற முறையை தமிழ் சினிமாவில் ஆரம்பித்துவைத்திருக்கிறார். விக்ரம் படத்தில் கைதி கேரக்டர்களை கொண்டு வந்து இணைத்தது ரசிகர்களிடம் பெரும் அப்ளாஸை அள்ளியது. எனவே லியோ படமும் எல்சியூவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுகுறித்து சின்ன ஹிண்ட்கூட கொடுக்காமல் ரகசியம் காத்துவருகிறார் லோகேஷ்.
தலைவர் 171: லியோ படத்துக்கு பிறகு அவர் கைதி 2வை இயக்குவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக ரஜினிகாந்த்துடன் ஒரு படத்தில் இணைகிறார் லோகேஷ். தலைவ 171 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
விஜய் ரியாக்ஷன் இந்நிலையில் தலைவர் 171 படத்தின் கதையை லோகேஷ் விஜய்யிடம் கூறியபோது அதற்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன் குறித்து தெரியவந்திருக்கிறது. கதையை கேட்டு முடித்தவுடன் லோகேஷ் கனகராஜிடம் விஜய், "10 நிமிடங்களில் ஒரு கதை எனக்கு இவ்வளவு பிடித்துப்போனதே இல்லை. சூப்பர்" என்று கூறியதாக லோகேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பு: லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்தியாவிலேயே பிரமாண்ட படமாகவும் இது இருக்க வாய்ப்பிருப்பதாக கோடம்பாக்கத்தில் பலமாகவே பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











