Lokesh Kanagaraj - 10 படங்களுடன் விலக அவர்தான் காரணம்.. உண்மையை சொன்ன லோகேஷ் கனகராஜ்
சென்னை: Lokesh Kanagaraj(லோகேஷ் கனகராஜ்) பத்து படங்களுடன் விலகுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார்.
கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் இப்போதைக்கு யார் என்றால் அவர் லோகேஷ் கனகராஜ்தான். இதுவரை இயக்கியிருக்கும் நான்கு படங்களும் ஹிட்டடித்திருக்கின்றன. குறிப்பாக கடைசியாக அவர் இயக்க விக்ரம் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆகி லோகேஷின் கிராஃபை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

லியோ: விக்ரம் படத்துக்கு பிறகு அவர் லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படமும் லோகேஷின் ஹிட் லிஸ்ட்டில் இணைந்துவிடும் என்ற நம்பிக்கை திரைத்துறையில் இருக்கிறது.
எல்சியூ: லோகேஷின் ஸ்பெஷாலிட்டியாக ரசிகர்கள் பார்ப்பது அவரது திரைக்கதையை. விக்ரம் படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றை ஆரம்பித்து கைதி மற்றும் பழைய விக்ரம் உள்ளிட்டவைகளை இணைத்தார். எனவே லியோ படமும் எல்சியூவில் வருமா வராதா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. ஆனால் அதுகுறித்து லோகேஷ் இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி 171: ஒருவேளை படம் பார்க்கும்போது அவர் சர்ப்ரைஸ் கொடுக்க வாய்ப்பு இருக்கலாம். இந்த சூழலில் அவர் அடுத்ததாக ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். அதற்கு அடுத்து கைதி 2, ரோலக்ஸ், விக்ரம் 2 என லைன் அப்பை பிஸியாக வைத்திருக்கிறார். ஆனால் பத்து படங்கள் இயக்கிவிட்டு நான் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
லோகேஷ் பேட்டி: இந்நிலையில் பத்து படங்களோடு ஒதுங்கிவிடுவேன் என கூறியதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார் லோகேஷ். அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், "என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனே இயக்குநர் குவெண்டின் டாரண்டினோதான். அவரும் தன் சினிமா கரியரில் 10 படங்களோடு விலகிவிடுவேன் என அறிவித்திருந்தார்.
அதேபோலதான்: அதேபோல்தான் நானும் நினைத்தேன். குறிப்பாக ஒவ்வொரு தலைமுறையினருக்கு ஒரு இயக்குநரை பிடிக்கும். தொடர்ச்சியாக நாம் படம் எடுக்கும்போது ரசிகர்களுக்கு அலுப்பு தட்டிவிட வாய்ப்பு இருக்கிறது. ஏன் ஒருகட்டத்தில் பிடிக்காமல்கூட போகலாம். அதையெல்லாம் மனதில் வைத்துதான் பத்து படங்களுடன் நான் விலகிவிடுவேன் என கூறியிருந்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











