Lokesh Kanagaraj - அரசியலில் எனக்கு பாதி அறிவுதான்.. அதான் அதை செய்வதில்லை.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

சென்னை: Lokesh Kanagaraj(லோகேஷ் கனகரா) சாதி - அரசியல் பிரச்னைகளை பேசும் படத்தை ஏன் எடுப்பதில்லை என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் ஓபனாக பேசியிருக்கிறார்.

வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியை அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இதுவரை அவர் இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட். குறிப்பாக விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தற்போது அவர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

Lokesh Kanagaraj has spoken openly about why he does not make films dealing with political issues

லியோ ரிலீஸ்: இதற்கும் முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய நான்கு படங்கள் போலவே இந்தப் படமும் ஹிட்டாகும் என்று நம்பிக்கையில் இருக்கின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமின்றி விக்ரம் படம் மெகா ஹிட்டானதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்தப் படத்தை முடித்துவிட்டு கைதி 2, ரஜினியுடன் ஒரு படம் என கமிட்டாகியிருக்கிறார் லோகேஷ்.

மோஸ்ட் வாண்டட்: லோகேஷ் கனகராஜ்தான் தற்போது மோஸ்ட் வாண்டட் இயக்குநர். அவரது படத்தில் சில சீன்களில் நடித்துவிட்டாலே ஃபேமஸ் ஆகிவிடலாம் என நடிகர்கள் நினைக்கின்றனர். எனவே இன்னும் பல வருடங்களுக்கு லோகேஷின் இடத்தை அசைக்க முடியாது என ரசிகர்கள் கூறினர். ஆனால் அவரோ மொத்தமே பத்து படங்கள்தான் இயக்குவேன் என கூறியிருந்தார். லோகேஷுக்கு ரசிகர்கள் இருந்தாலும் அவர் ஒரே ஜானரில்தான் படங்களை இயக்குகிறார் என்ற விமர்சனத்தையும் அவர் மீது ஒருதரப்பினர் எழுப்புவதுண்டு.

லோகேஷ் பேட்டி: லியோ படம் ரிலீஸாக இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன. எனவே படத்துக்கான ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் ஒரு பேட்டியில் அவரிடம் நீங்கள் ஏன் சாதி - அரசியல் பிரச்னைகளை பேசும் படம் எடுப்பதில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் ஒரு கமர்ஷியல் இயக்குநர் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதில் முடிந்த அளவு அதிகம் மசாலா சேர்க்காமல் நம்பகத்தன்மையை சேர்க்க முயற்சிக்கிறேன்.

ஏன் எடுக்கவில்லை. சாதி, அரசியல் பிரச்னைகளை பேசாமல் இருப்பதற்கும் அந்த மாதிரியான படங்கள் எடுக்காமல் இருப்பதற்கும் காரணம் எனக்கு அதில் போதிய அளவு அறிவில்லை என்பதுதான் உண்மை. பாதி அறிவு என்பது எப்போதும் ஆபத்தானது என்பதைத்தான் நான் தீர்க்கமாக நம்புகிறேன். அப்படி இருக்கும்போது எனக்கு தெரியாத ஒன்றை பற்றி எப்படி எடுக்க முடியும். அதுமட்டுமின்றி எனக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் அது தெரியாது என ஒத்துக்கொள்வது சரியான ஒன்று.

ஒரு இயக்குநராக எனக்கு அரசியலில் போதிய அறிவில்லை என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லைதான். ஆனால் அதுதான் உண்மை. என்னுடைய தேடல் வேறு எங்கோ இருக்கிறது" என்றார். அவரது இந்தப் பேட்டி இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X