Lokesh Kangaraj - ரஜினி படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் போட்டிருக்கும் பிளான்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட்

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) ரஜினிகாந்த் படத்தை முடித்த பிறகு தன்னுடைய பிளான் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் இப்போதைக்கு லோகேஷ் கனகராஜ்தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அவர் இயக்கிய நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. அவர் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கியிருக்கிறார். படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

Lokesh Kanagaraj has talked about his plans after completing the Rajinikanth film

அடுத்த படம்: லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்குவார் என முதலில் கூறப்பட்டது. அது கன்ஃபார்ம்தான் என்றாலும் அதற்கு முன்னதாக ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய அடையாளமாக இருக்க வேண்டும் என ரஜினிகாந்த் விரும்புகிறார். அதற்காக லோகேஷ் கனகராஜ் முழு மூச்சாக இறங்கவிருக்கிறார்.

ஸ்க்ரீன் ப்ளேவில் மேஜிக்: அவருக்கு ஏற்பட்டிருக்கும் டிமாண்டிற்கு காரணம் அவர் உருவாக்கி வைத்திருக்கும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்தான். தமிழ் சினிமாவுக்கு புதிதான அந்த விஷயத்தை விக்ரம் படத்தில் ரொம்பவே இயல்பாக சாதித்துக்காட்டிவிட்டார். இதன் காரணமாக லியோ படமும் எல்சியூவுக்குள் வருமா என்ற கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது. அந்த எல்சியூவின் தாக்கத்தில்தான் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பேகூட லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டதும் அது லியோவில் நிறைவேறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதான் பிளான்: இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியாக இன்னும் 9 நாட்கள் இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகள் சூடு பிடித்திருக்கின்றன. அதனையொட்டி லோகேஷ் கனகராஜ் படு பிஸியாக பேட்டி கொடுத்துவருகிறார். அந்தவகையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய அடுத்தடுத்த பிளான் குறித்து பேசியிருக்கிறார்.

Lokesh Kanagaraj has talked about his plans after completing the Rajinikanth film

என்ன பிளான்?: பேட்டியில் பேசிய அவர், "மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு கைதி 2வுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் விக்ரம் பண்ண வேண்டிய சூழல் ஆகிடுச்சு. கைதி 2க்காக கார்த்தி சார் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறார். ரஜினி சாரை வைத்து இயக்கும் படத்தை முடித்த பிறகு கைதி 2வை ஸ்டார்ட் செய்வோம். அதன் பிறகு விக்ரம் 2, ரோலக்ஸ் ஆகிய படங்களை செய்ய வேண்டும்" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் பக்கா பிளான் போட்டிருக்கிறார். செம ட்ரீட் காத்திருக்கு என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X