Thalaivar 171: தளபதிக்கு பிறகு தரமான சம்பவம்.. தளபதி 171ல் மம்மூட்டி நடிக்கப்போறாரா?

சென்னை: தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக தலைவர் 171 படத்துக்காக நான் ஒரு காஸ்டிங்கை இறக்குறேன் பாருங்க என லோகேஷ் கனகராஜ் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டியையே களமிறக்க பக்கா பிளான் போட்டுள்ளாராம்.

இயக்குநர் நெல்சன் ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமாரை நடிக்க வைத்த நிலையில், ரஜினிகாந்த் உடன் நடிக்க கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏகப்பட்ட பிரபல நடிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Lokesh Kanagaraj in talks with Mammootty for Rajinikanths Thalaivar 171

72வயதிலும் பாக்ஸ் ஆபிஸ் கிங்: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 80 வயதிலும் தரமான படங்களில் நடித்து வந்தாலும், அவர் எப்போதோ சோலோ சூப்பர்ஸ்டாரில் இருந்து மாறி குணசித்ர நடிகராக மாறிவிட்டார். ஆனால், 72 வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் தனது சிம்மாசனத்தை எவனுக்கும் விட்டுத் தரமாட்டேன் என்றும் நான் இருக்கும் வரை இங்க நான் தான் கிங்.. என் படம் தான் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என பட்டையை கிளப்பி வருகிறார். இந்த வயதில் மற்ற நடிகர்கள் எல்லாம் இதே அளவுக்கு மாஸ் காட்டுவார்களா என்பது எதிர்காலத்திலும் சந்தேகம் தான்.

மல்டி ஸ்டார்: மார்வெல் படங்களிலேயே மல்டி யூனிவர்ஸ் கான்செப்ட் கொண்டு வந்து 3 ஸ்பைடர்மேன்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி ரசிகர்களுக்கு வேறலெவல் என்டர்டெயின்மென்ட் கொடுத்து வருகின்றனர். ஒரே ஆள் முதுகில் மொத்த சுமையும் ஏற்றும் படங்களை விட இது போன்ற மல்டி ஸ்டார் படங்கள் அவர்கள் சும்மா நடந்து வந்தாலே மரண மாஸாக மாறிவிடுவதால் ரசிகர்கள் மட்டுமின்றி இயக்குநர்களும் அதை எடுக்கவே முயற்சித்து வருகின்றனர்.

தலைவர் 171ல் மம்மூட்டி: ஜெயிலர் படத்திலேயே வில்லனாக மம்மூட்டியை நடிக்க வைக்கலாம் என பேசி அவரும் என் நண்பணுக்காக நடிக்கிறேன் என ஒத்துக் கொண்ட நிலையில், அவரை அடிக்க மனம் வராமல் ரஜினி கடைசியில் மாற்றியதாக கூறியிருந்தார். இந்நிலையில், தலைவர் 171வது படத்தில் மம்மூட்டியை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் பக்காவாக திட்டம் போட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சிவகார்த்திகேயன் உடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், ஸ்டார் காஸ்ட்டுக்காகவே தலைவர் 171 படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் பார்க்க செல்வார்கள் என்பது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X