twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விரைவில் ‘தளபதி 67‘ பற்றி சொல்கிறேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. லோகேஷ் கனகராஜ்!

    |

    சென்னை : கல்லூரி விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்த திரைப்படம் பற்றி விரைவில் சொல்கிறேன் கொஞ்ச நாள் காத்திருங்கள் என்றார்.

    மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.

    இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    மீண்டும் வருகிறேன்..சமூகவலைத்தளங்களிலிருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்..இது தான் காரணமா?மீண்டும் வருகிறேன்..சமூகவலைத்தளங்களிலிருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்..இது தான் காரணமா?

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

    2017ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் தனக்கான பாதையை உருவாக்கி கமலுடன் பணிபுரியும் வாய்ப்பை பெற்றார்.

    விக்ரம்

    விக்ரம்

    கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை இயக்கி இந்திய அளவில் லோகேஷ் கனகராஜ் பேசப்பட்டார். விக்ரம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ள கூறப்படுகிறது.

    சிறப்பு விருந்தினராக

    சிறப்பு விருந்தினராக

    இன்று தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜிடம், கல்லூரி மாணவர்களிடம் கலந்துரையாடினார். கலந்துரையாடல் தொடங்கும் முன்பே தளபதி 67 குறித்து எதுவும் கேட்க வேண்டாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். மாணவர்கள் வேறு என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறியிருந்தார்.

    கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

    கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

    அப்போது ஒரு மாணவி, மாணவர்கள் அனைவருமே உங்களை கவனித்துக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் ஆரம்பத்திலிருந்து எடுக்கும் மாநகரம்,கைதி,மாஸ்டர், விக்ரம் என அனைத்தும் மிரட்டலா இருக்கு.நீங்கள் அடுத்து எடுக்கும் படத்தில் நடிக்கக்போகும் ஹீரோ, ஹீரோயின் பற்றி சொல்லுங்க என்றார். இதற்கு பதிலளித்த லோகேஷ், தயாரிப்பு தரப்பிலிருந்து எதுவும் சொல்லாமல் என்னால் எதுவும் சொல்ல முடியாது, கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க சொல்லிவிடுகிறேன் என்றார்.

    English summary
    Director Lokesh kanagaraj interesting information about thalapathy 67 movie update : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X