கூலி 1000 கோடியை அடிக்கும்.. சன் பிக்சர்ஸ் போட்ட கணக்கு? ஆனால், லோகேஷின் கணக்கு என்ன?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. சுமார் 350 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகி வருகிறது. ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபபேந்திரா, அமீர்கான், ஸ்ருதிஹாசன் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் முக்கால் பாகம் பட்ஜெட் நடிகர்களின் சம்பளத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரஜினிகாந்திற்கு ரூ.150 கோடி, நாகார்ஜுனாவிற்கு ரூ.20 கோடி, அமீர்கானுக்கு ரூ.25 கோடியை தயாரிப்பு நிறுவனம் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் 8 ஆண்டுகளுக்கு முன்பு 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்தின் மூலம் லோகேஷின் பெயர் இந்திய திரையுலகில் பிரபலமானது. அதன் பின் 'மாஸ்டர்', 'விக்ரம்' மற்றும் 'லியோ' திரைப்படங்களின் மூலம் வெற்றியைத ருசித்தார். தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த கமல்ஹாசனுக்கு விக்ரம் படம் மூலம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ் தான். மேலும், தன்னுடைய திரைப்படங்களின் கதைகளுக்கு இணைப்பு கொடுத்து சினிமாட்டிக் யுனிவர்ஸ் உருவாக்கி வரும் இவர், கைதி-2 மற்றும் ரோலக்ஸ் படத்தையும் இயக்க உள்ளார்.

லோகேஷ் கனகராஜ்: ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14ந் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலையை லோகேஷ் இப்போதே தொடங்கி விட்டார். 'தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்' யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் மற்றும் அவரின் சம்பளம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த இவர், "ரஜினிகாந்த் சார் சம்பளம் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், இந்த படத்திற்கு என்னுடைய சம்பளம் 50 கோடி என்பது உண்மைதான். அதற்கு நான் வரி செலுத்துகிறேன். நான் இதற்கு முன்பு இயக்கிய 'லியோ' திரைப்படம் 600 கோடியை ரூபாய் வசூல் செய்தது. அதனால் என்னுடைய சம்பளம் இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டது. இது என் உழைப்பிற்கு கிடைத்த பரிசு. எதுவும் எளிதாக கிடைக்காது என்றார்.
3 ஷோ பார்ப்பேன்: தொடர்ந்து கூலி படம் குறித்து பேசிய லோகேஷ், சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படம் வெளியானதும் முதல் 3 ஷோ பார்ப்பேன். அதன் பிறகு பள்ளி நண்பர்களுடன் ஒரு வாரம் தலைமறைவாகி விடுவேன். படத்தின் வரவேற்பு, விமர்சனம், பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து நான் கவலைப்பட மாட்டேன். ஒரு வாரம் கழித்து திரும்பி வந்துவிடுவேன். என்னுடைய முந்தைய திரைப்படங்களின் போதும் நான் இதைத்தான் செய்தேன். கூலி திரைப்படம் வெளியாகும் போதும் இதைத்தான் செய்வேன் என்றார்.
1000 கோடி வசூலா: அதே போல படம் ஆயிரம் கோடியை வசூலிக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த இவர், அதனை என்னால் உறுதியாக சொல்லமுடியாது. மக்கள் 150 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து படம் பார்க்க வருகிறார்கள். அதற்கு ஏற்றபடி படம் நிச்சயம் இருக்கும். படம் நல்ல வசூலை பெற்றால், நானும் என் படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம் என்றார். அதே போல, சன் பிக்சர்ஸ் 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ள வேறு கணக்கை போட்டுள்ளது. அதாவது, கூலி படத்தின் ஓடிடி உரிமை 70 கோடியை தாண்டி விற்றுள்ளது. மேலும், டிஜிட்டல் உரிமையை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால் சன் நெட்வொர்க் பெற்றுள்ளது. இந்த சூழலில் ஆயிரம் கோடி கலெக்ஷன் அள்ள திட்டம் போட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











