Loki: கமல், ரஜினி, விஜய்.. இவங்களை விடவும் எனக்கு வேற ஒன்னு முக்கியம்.. லோகேஷ் கனகராஜ் உஷார்!

சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் முக்கியமான இயக்குநர் என்ற இடத்திற்கு வளர்ந்து நிற்கிறார் லோகேஷ் கனகராஜ். டிரெண்ட் செட்டராகவே மாறிவிட்டார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கூலி படம் தான் தமிழ் சினிமாவுக்கு ரூபாய் 1000 கோடிகளை வசூல் ரீதியாக ஈட்டித் தரப்போகிற படமாகவும் இருக்கப்போகிறது என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படம் வரு 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது, டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. டிரைலர் சரியாக 7 மணிக்கு ரிலீஸ் செய்யப்படவுள்ளது. அதேபோல் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

Lokesh Kanagaraj Interview About Coolie Rajinikanth and How He Treats Big Stars

ரஜினிகாந்த்: படத்தின் புரோமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில், அவர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். வலைப்பேச்சு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், " லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் கூலி படத்தின் கதையை ரஜினி சாருக்கு சொல்லிவிட்டேன். அனிருத் மூலமாகத்தான் கதையைச் சொன்னேன். இது மட்டும் இல்லாமல் பல கட்டங்களாக கதை சொன்ன பிறகுதான் ரஜினி சார் இதில் கமிட் ஆனார்.

இதில் அதிக கவனம்: நான் கமல் சாருக்கு விக்ரம் படத்தை ஒரு ஃபேன் பாயாகத்தான் எடுத்தேன். ஆனால் அதைக் கடந்து பொது மக்களுக்கும் அதில் கனெக்ட் ஆகும் படியாகத்தான் படத்தை எடுத்தேன். எனது மற்ற படங்களை எடுத்துக் கொண்டாலும் நான் அப்படித்தான் எடுத்திருப்பேன். பெரிய நடிகரை திருப்தி படுத்த வேண்டும், அவரது ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதைக் கடந்து பொது மக்களுக்கும் அந்த படம் பிடிக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருந்து வந்துள்ளேன்.

Lokesh Kanagaraj Interview About Coolie Rajinikanth and How He Treats Big Stars

லோகேஷ் உஷார்: படம் நன்றாக இருந்தாலும் இல்லை என்றாலும் பெரிய நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் படத்தை பார்க்கத்தான் போகிறார்கள். ஆனால் பொதுமக்கள் படம் நன்றாக இருந்தால்தான் படம் பார்க்க வருவார்கள்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலரும், ' லோகேஷ் கனராஜ் சொல்வது சரியானதுதான். மாஸ் நடிகர்களுக்கு என இருக்கும் ரசிகர்கள் படம் நன்றாக இருந்தாலும் இல்லை என்றாலும் படம் பார்க்க வந்துவிடுவார்கள். ஆனால் பொதுமக்கள் அப்படி இல்லை தான் எனவும் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X