ரஜினி, சல்மான் கான் வரிசையில் ராக்கி பாய்... லோகேஷுக்கு வலைவீசும் சூப்பர் ஸ்டார்ஸ்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் தற்போது காஷ்மீர் பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருகிறது.

லியோ படத்தை முடித்துவிட்டு கார்த்தி நடிக்கும் கைதி 2 இயக்கவுள்ளார் லோகேஷ்.

அதனைத் தொடர்ந்து தங்களது படத்தை இயக்க வேண்டும் என மூன்று சூப்பர் ஸ்டார்கள் லோகேஷ் கனகராஜ்ஜிடம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 லோகேஷ் கனகராஜ் சம்பவம்

லோகேஷ் கனகராஜ் சம்பவம்

விஜய்யின் 67வது படமாக உருவாகி வரும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்திற்குப் பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம், மன்சூர் அலிகான் என மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 அடுத்தடுத்து மெகா ஆஃபர்ஸ்

அடுத்தடுத்து மெகா ஆஃபர்ஸ்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என இதுவரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்கள் வசூலில் மாஸ் காட்டின. இதனால், லோகேஷின் லியோ படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லியோவை முடித்துவிட்டு கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். அதற்குள்ளாகவே லோகேஷ் கனகராஜ்ஜை புக் செய்ய டாப் ஹீரோக்களும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் ரெடியாகிவிட்டன. அதன்படி, 3 சூப்பர் ஸ்டார்கள் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ரெடியாக உள்ளனர்.

 லோகேஷின் முடிவு என்ன?

லோகேஷின் முடிவு என்ன?

ஏற்கனவே ரஜினி, சல்மான் கான் ஆகியோர் லோகேஷுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினி தனது கடைசிப் படத்தை லோகேஷ் இயக்க வேண்டும் ஆசைப்படுகிறாராம். அதேபோல், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் லோகேஷ் கனகராஜ்ஜிடம் கதை இருந்தால் கேட்டுள்ளாராம். இதில் ரஜினி படத்திற்கு 35 கோடியும், சல்மான் கான் படத்தை இயக்க 50 கோடி வரையும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இவர்களின் வரிசையில் தற்போது கேஜிஎஃப் ஹீரோ யாஷும் லோகேஷ் கனகராஜ்ஜிடம் கதை கேட்டுள்ளாராம்.

 பல கோடிகளில் சம்பளம்

பல கோடிகளில் சம்பளம்

ரஜினி படத்துக்கு 35 கோடி, சல்மான் கான் 50 கோடி என ஆஃபர் கொடுத்துள்ளதால், ராக்கி பாய் யாஷும் மிகப் பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க ரெடியாகிவிட்டாராம். இதனால் லோகேஷும் யாஷின் ஆஃபருக்கு ஓக்கே சொல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநராக ஷங்கர் தான் காணப்படுகிறார். இப்போது அவரையும் தூக்கி சாப்பிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

 லைஃப் டைம் செட்டில்மென்ட்

லைஃப் டைம் செட்டில்மென்ட்

விக்ரம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சந்தீப் கிஷன், லோகேஷின் முதல் படமான மாநகரம் பட்ஜெட்டில், விக்ரம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுவதாக பேசியிருந்தார். லோகேஷின் கேரியரும் அப்படியே ஒவ்வொரு படத்திலும் வேற லெவலில் ஹைப் கூடி வருகிறது. லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த லோகேஷ், ஐந்தே படங்களில் இப்போது கோடிகளில் பயணித்துக் கொண்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் காஷீரில் நடைபெற்ற் வரும் லியோ ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X