சூர்யா மற்றும் கார்த்தியை இணைத்து ஒரு படம் ரீமேக் செய்ய பேச்சு வார்த்தை நடத்திய லோகேஷ்
சென்னை: விக்ரம் எனும் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த இயக்குநர் லோகேஷ் தற்சமயம் சத்தம் இல்லாமல் நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் கதையை எழுதிக் கொண்டிருக்கிறார்.
Recommended Video
அதன் பிறகு கைதி இரண்டு, விக்ரம் மூன்று என்று வரிசையாக அடுத்தடுத்து படங்கள் இயக்கவும் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியை ஒரே படத்தில் இயக்குவதற்கு முன்னதாக தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக லோகேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இரும்புக் கை மாயாவி
மாநகரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவை இயக்குவதற்குத்தான் லோகேஷ் ஒப்பந்தமாகி இருந்தாராம். இரும்புக்கை மாயாவி என்று தலைப்பிடப்பட்ட அந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ பிளஸ் ரியாலிட்டி உள்ள கதையம்சம் கொண்ட படம் என்று கூறியுள்ளார். மாநகரம் திரைப்படத்தை 2.5 கோடியில் எடுத்த லோகேஷிற்கு 40 கோடிகள் பட்ஜெட்டில் இரும்பு கை மாயாவி எடுக்க தன்னம்பிக்கை இல்லாததால் தானே தயாரிப்பாளரிடம சொல்லி அந்தப் படத்தை கைவிட்டுவிட்டாராம் லோகேஷ்.

சிறிய படம்
அதேபோல பிளாக் ஹியூமர் ஜானரில் மாநகரம் போன்றே சிறிய படம் ஒன்றை எடுக்கவும் திட்டமிட்டாராம். இரும்புக்கை மாயாவி அல்லது அந்தக் காமெடி படம்தான் தன்னுடைய இரண்டாவது படமாக அமைந்திருக்க வேண்டியது. ஆனால் தான் எதிர்பார்க்காத வகையில் தொடர்ச்சியாக நான்கு ஆக்ஷன் திரைப்படங்களை எடுத்து விட்டதாகவும் எதிர் காலத்தில் கண்டிப்பாக வேறு ஜானரிலும் படம் இயக்க தயாராக இருப்பதாகவும் லோகேஷ் கூறியுள்ளார்.

எப்போதும் சூர்யா கூறுவது
சூர்யாவின் படத்தை தள்ளி வைத்த லோகேஷிற்கு கார்த்தியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம்தான் விஜய் மற்றும் கமல் ஹாசன் அவர்களையும் இயக்க வாய்ப்பு கிடைத்தது லோகேஷிற்கு. நடிகர் சூர்யா எப்போது தன்னை பார்த்தாலும் இரும்பு கை மாயாவி படத்தை பற்றி பேசுவார் என்றும் அது அவருக்காகவே எழுதிய கதை என்பதால் எப்போது எடுத்தாலும் அவரை வைத்துதான் எடுப்பேன் என்றும் லோகேஷ் கூறியுள்ளார்.

சூர்யாவும் கார்த்தியும்
மலையாளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஐயப்பனும் கோஷியம். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழில் இதனை பார்த்திபன் மற்றும் கார்த்தியை வைத்து ரீமேக் செய்ய பேச்சு வார்த்தைகள் நடக்கிறது. ஆனால் முதலில் இந்த படத்தை பார்த்த லோகேஷ் உடனே தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிற்கு கால் செய்து நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து நான் ரீமேக் செய்கிறேன் என்று கூறினாராம். ஆனால் படத்தின் ரீமேக் ரைட்ஸ் வேறொரு தயாரிப்பு நிறுவனம் வாங்கி இருந்ததால் அந்த பேச்சு வார்த்தை அப்படியே நின்று போனதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











