Lokesh kanagaraj - யப்பா தொந்தரவிலிருந்து தப்பிச்சோம்.. விஜய் 68 படத்தால் லோகேஷ் கனகராஜ் நிம்மதி

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) விஜய் - வெங்கட் பிரபு இணையும் படத்தின் அறிவிப்பு வெளியானதில் லோகேஷ் கனகராஜ் நிம்மதியில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஐந்தாவது படமாக உருவாகிறது லியோ. மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் லியோவில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துவருகின்றனர். அனிருத் இசையமைப்பில் லலித்குமார் படத்தை தயாரித்துவருகிறார்.

Lokesh Kanagaraj is relieved after the announcement of the Vijay-Venkat Prabhu film

சென்னையில் ஷூட்டிங்:

காஷ்மீரில் இரண்டு மாதங்கள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னையில் ஷூட்டிங்கை தொடங்கியது படக்குழு. காஷ்மீரில் ஷூட்டிங் செய்தபோதுகூட லோகேஷ் கனகராஜ் ரிலாக்ஸாக வேலை பார்த்தார். ஆனால் சென்னையில் ஷூட்டிங் நடப்பதால் ரொம்பவே கவனமுடனும், வேகமாகவும் ஷூட்டிங்கை நடத்திவருகிறார். ரிலீஸ் தேதி முன்னரே குறிக்கப்பட்டுவிட்டதால் அதற்குள் படத்தை முடிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு கூடியிருக்கிறது.

ஷூட்டிங் எப்போது நிறைவு:

லியோ படத்தின் ஷூட்டிங் இப்போது ஆதித்யாராம் ஸ்டூடியோவில் நடந்துவருகிறது. அங்கு விஜய்க்கும், அர்ஜுனுக்கும் இடையேயான ஆக்‌ஷன் காட்சிகள் மும்முரமாக நடந்துவருகிறது. குறிப்பாக இந்த ஆக்‌ஷன் காட்சியில் இருவருமே இளமை கெட்டப்பில் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஜூன் 15ஆம் தேதி ஷூட்டிங் முடிவடையும் என்றும் ஜூலை மாதத்திற்குள் விஜய் டப்பிங் கொடுத்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

அப்டேட் கேட்டு தொந்தரவு:

சென்னையில் ஷூட்டிங் நடப்பதன் காரணமாக அவ்வப்போது நடக்கும் விருது வழங்கும் விழாக்களில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டுவருகிறார். ஆனால் அப்படி அவர் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சியிலும் தவறாமல் அவரிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி லியோ அப்டேட்தான். அதற்கு அவரோ, படம் அக்டோபர் மாதம்தான் ரிலீஸ் இப்போதே எல்லாத்தையும் சொல்லிவிட்டால் பிறகு சொல்வதற்கு ஒன்றுமே இருக்காது என்று கூறிவருகிறார்.

Lokesh Kanagaraj is relieved after the announcement of the Vijay-Venkat Prabhu film

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் லோகேஷ்:

இந்நிலையில் லியோ படத்தை முடித்துவிட்டு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தச் சூழலில் விஜய் 68 படத்தின் அறிவிப்பு வெளியானதை அடுத்து லோகேஷ் கனகராஜ் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறாராம். அதாவது, அந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அனைவருமே கிட்டத்தட்ட லியோவை மறந்துவிட்டு விஜய் 68 பற்றியே பேசிவருகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க, எல்லோரும் விஜய் 68ஐ பற்றி பேசிக்கொண்டிருப்பதால் லியோவை ஓரளவு மறந்திருக்கிறார்கள். எனவே இனி தன்னிடம் லியோ குறித்த அப்டேட் கேட்டு தொந்தரவு செய்யமாட்டார்கள். ரிலாக்ஸாக ஷூட்டிங்கை முடித்துவிட்டு படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்தலாம் என்று அவர் தனது நண்பர்களிடம் கூறிவருவதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. விஜய் - வெங்கட் பிரபு படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் பூஜை ஜூன் 22ஆம் தேதி போடப்படலாம் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X