twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாஸ்டர் ரிலீஸ் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லேட்டஸ்ட் அப்டேட்.. என்ன சொன்னார் தெரியுமா?

    |

    சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் எப்போ, எப்படி வரும் என்கிற கேள்வி தான் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனங்களிலும் எழுந்துள்ளது.

    இந்நிலையில், தளபதி விஜய் ரசிகர்கள் ஆசிரமம் ஒன்றுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று செய்துள்ளனர்.

    அதனை தலைமை தாங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் ரிலீஸ் குறித்த சூப்பரான தகவலை கூறியுள்ளார்.

     இவர்தான் இலங்கை அழகி பியூமியின் முன்னால் கணவரா? படு நெருக்கமான போட்டோக்களை வெளியிட்டு உருக்கம்! இவர்தான் இலங்கை அழகி பியூமியின் முன்னால் கணவரா? படு நெருக்கமான போட்டோக்களை வெளியிட்டு உருக்கம்!

    எக்கச்சக்க எதிர்பார்ப்பு

    எக்கச்சக்க எதிர்பார்ப்பு

    தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ், விஜே ரம்யா, பிரேம் குமார், ஸ்ரீமன், ஸ்ரீநாத் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் உருவாகி உள்ளது. அந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    ரிலீசுக்கு வந்த தடை

    ரிலீசுக்கு வந்த தடை

    ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் திரைப்படம் ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தளபதி விஜய்யும், பிகில் படத்தை முடித்த கையோடு, ரசிகர்களை ஒரு வருஷம் கூட காக்க வைக்கக் கூடாது, அடுத்த சம்மரிலேயே சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என மாஸ்டர் படத்தில் நடித்துக் கொடுத்தார். ஆனால், கொரோனா காரணமாக அதன் ரிலீசுக்கு தடை ஏற்பட்டது.

    தீபாவளி ரிலீஸ்

    தீபாவளி ரிலீஸ்

    அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பிகில் படம் போலவே இந்த ஆண்டு தீபாவளிக்காவது மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், தீபாவளிக்குக் கூட தியேட்டர்கள் திறக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நெட்பிளிக்ஸ்

    நெட்பிளிக்ஸ்

    மாஸ்டர் படத்தை நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திற்கு விற்று விட்டார்கள் என்றும், சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை போலவே மாஸ்டர் திரைப்படமும் ஒடிடியில் தான் வெளியாகும் என்றும் வேறு வழியில்லை என்றும் ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின. இந்நிலையில், மாஸ்டர் ரிலீஸ் குறித்த மாஸான அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

    தியேட்டரில் தான்

    தியேட்டரில் தான்

    இன்று தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக ஆசிரமம் ஒன்றுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் பத்திரிகையாளர்கள், மாஸ்டர் ரிலீஸ் குறித்த கேள்வியை எழுப்பினர். அதற்கு சற்றும் தயங்காமல், நிச்சயம் ஒடிடியில் வெளியாகாது. தியேட்டர்கள் திறந்தவுடன் மாஸ்டர் ரிலீசாகும் என்றார்.

    ஆர்வமுடன்

    ஆர்வமுடன்

    மாஸ்டர் ரிலீஸ் கொரோனா வைரஸ் காரணமாக காலதாமதம் ஆகிவிட்டது. தியேட்டர்கள் திறப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ரசிகர்களை போலவே தானும் மாஸ்டர் படத்தின் வெளியீட்டிற்காக ஆர்வமுடன் காத்திருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறினார். மாஸ்க் அணிந்து பாதுகாப்பான முறையில் அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

    எவனென்று நினைத்தாய்

    எவனென்று நினைத்தாய்

    சமீபத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள எவனென்று நினைத்தாய் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக அறிவித்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அனிருத் இசையில் உருவாக உள்ள அந்த படத்தின் ஃபேன் மேட் மோஷன் போஸ்டரையும் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டு பாராட்டி இருந்தார்.

    English summary
    Director Lokesh Kanagarj once again confirmed Master release only on theaters not on OTT today. Vijay fans rule the social media once again with the new update.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X