தளபதியின் ‘லியோ‘ படத்தின் மற்றுமொரு சுவாரசிய தகவல்.. த்ரிஷாவின் மகிழ்ச்சிக்கு காரணம் இதுதானா?
சென்னை : தளபதி விஜய், திரிஷா நடிக்கும் 'லியோ' படத்தின் மற்றுமொரு சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பால், கடந்த வாரம் இணையமே திக்குமுக்காடி போனது.
இதில், விஜய், திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் ஆகியோர் கமிட்டாகி உள்ளனர்.

லியோ
தளபதி 67 படத்திற்கு லியோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் பிரோமோ வெளியாக 24 மணி நேரத்திற்குள் 27 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 2 நிமிடம் 48 நொடிகள் நீளமிருக்கும் இந்த டைட்டில் பிரோமோவில் விஜய் மட்டுமே ஜாலியாகவும், டெரராகவும் மாறி மாறி வருகிறார்.

Bloody Sweet
சாக்லேட்டை கைகளில் பூசியும், நெருக்கு குழம்பில் கத்தியை செய்து அதில் சாக்லேட்டில் நனைத்து 'Bloody Sweet' என்று முரட்டுத்தனமாக கூறுகிறார். இந்த பிரோமோவைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி இணையத்தில் அலப்பறை செய்து வருகின்றனர். இப்படம் அக்டோபர் மாதம் 19ந் தேதி அதாவது ஆயுத பூஜை பாண்டிகை விடுமுறைக்கு வெளியாக உள்ளது.

சுவாரசியமான தகவல்
படத்தின் படபிடிப்பிற்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளனர், இந்தபடத்தை எதிர்நோக்கி ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் காத்துள்ளனர். இந்த நிலையில் படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது . இது என்னவென்றால், லியோ திரைப்படம் நடிகர் விஜய்க்கு மட்டும் 67வது படம் இல்லை, படத்தின் நாயகி திரிஷாவுக்கும் இது 67வது படமாம் இதனால், திரிஷா மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்த படங்களில்
நடிகை திரிஷாவின் நடிப்பில் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இதில், திரிஷா குந்தவை என்ற முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அண்மையில், ராங்கி என்ற படத்தில் நடித்திருந்தார் இப்படம் கலவையான விமர்னத்தை பெற்றது. பொன்னியின் செல்வன் 2, சதுரங்க வேட்டை 2 , தி ரோட், லியோ ஆகிய படங்களை கை வசம் வைத்துக்கொண்டு மீண்டும் ஒரு கம்பேக் கொடுக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











