Lokesh Kanagaraj: பிரேக்அப் ஆகும் லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி... அட பாவமே இது எப்போ..?
சென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து கைதி 2, ரஜினியின் தலைவர் 171 படங்களை இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இயக்கத்தில் லோகேஷும் அனிருத்தும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருந்த இந்தப் படம் ட்ராப் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேக்அப் ஆகும் லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்கள் மூலம் மாஸ் காட்டிய லோகேஷ், தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள லியோ படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்கவுள்ளார்.
இன்னொருபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170 படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இயக்குநராக மட்டுமே கலக்கி வரும் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ஹீரோவாகவும் நடிக்கவிருந்தார். ஆர்ஜே பாலாஜி இயக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் லோகேஷ். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இயக்கும் ஒரு படத்தில் லோகேஷ் கனகராஜும் அனிருத்தும் ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்பட்டது. மேலும், இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. கேஜிஎஃப், விக்ரம் உட்பட பல பிரம்மாண்டமான படங்களுக்கு ஸ்டண்ட் கோரியோகிராபி செய்து பிரபலமானவர்கள் அன்பறிவு சகோதரர்கள்.
டாப் ஹீரோக்களின் படங்களுக்கு ஸ்டண்ட் கோரியோகிராபி செய்துவரும் அன்பறிவு சகோதரர்கள், முதன்முறையாக இயக்குநர் கனவோடு களமிறங்கினர். அதன்படி ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை அவர்கள் இயக்கவுள்ளதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்தப் படம் இன்னும் தொடங்கவே இல்லை. இதனிடையே தான் லோகேஷ், அனிருத் ஆகியோர் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது லோகேஷ், அனிருத் இருவருமே படு பிஸியாக உள்ளனர். லியோ ஷூட்டிங் முடிந்ததும் கைதி 2, தலைவர் 171 என லோகேஷின் லைன் அப்பில் 2 படங்கள் உள்ளன. அனிருத் இன்னும் பிஸியாக காணப்படுகிறார். அதனால், லோகேஷ் - அனிருத் இணைந்து நடிக்கவிருந்த படத்தை ட்ராப் செய்துவிடலாம் என சன் பிக்சர்ஸ் முடிவெடுத்துள்ளதாம். ஆனாலும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
மாஸ்டர், விக்ரம் படங்களில் ஒன்றாக பணிபுரிந்த லோகேஷ், அனிருத் கூட்டணி, தற்போது லியோவிலும் இணைந்துள்ளது. லோகேஷின் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்கு, தரமாக பிஜிஎம் போட்டு அதகளம் செய்துவருகிறார் அனிருத். அதனால் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அது தொடங்கும் முன்னரே ட்ராப் ஆகவுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











