Lokesh Kanagaraj: LCU படங்களுக்கு எகிறும் எதிர்பார்ப்பு... லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். ஐந்தே படங்களில் கோலிவுட்டின் டாப் மோஸ்ட் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டார்.
லோகேஷின் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அவரது லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் பெரிய சக்சஸ் கொடுத்துள்ளது. இதனால் LCU ஜானர் படங்களில் லோகேஷ் அதிரடி முடிவு எடுத்துள்ளாராம்.

LCU லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு
ஷார்ட் ஃபிலிம்ஸ் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், மாநகரம் திரைப்படம் வழியாக இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிக கவனம் ஈர்த்த லோகேஷ், கார்த்தியின் கைதி வெளியானதும் முன்னணி இயக்குநர்கள் லிஸ்ட்டில் இணைந்தார். பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கியதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டினார்.
இது எல்லாவற்றையும் சேர்த்து வைத்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் தரமான சம்பவம் செய்திருந்தார். பிரம்மாண்டமான உருவான விக்ரம் கடந்தாண்டு இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது. அப்போது தான் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் எனப்படும் LCU உருவானது. அதாவது கைதியில் இருந்து ஒரு லீட் எடுத்து விக்ரம் படத்தில் பயன்படுத்தியிருந்தார். அதோடு ரோலக்ஸ் என்ற புதிய கேரக்டரையும் அறிமுகப்படுத்தினார்.
அதுமட்டும் இல்லாமல் இனிமேல் தான் இயக்கும் படங்கள் LCU வகையில் இருக்கும் என அறிவித்தார். இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்து வந்த சினிமாட்டிக் யூனிவர்ஸை முதன்முதலாக கோலிவுட்டிலும் கொண்டு வந்தார் லோகேஷ். இந்த LCU ஹைப்பை எகிற வைக்கும் விதமாக விஜய்யின் லியோ பட க்ளைமேக்ஸில் கமலின் வாய்ஸ் ஓவர் இருந்தது. இதனால் அடுத்தடுத்து லோகேஷ் இயக்கப் போகும் LCU படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இதுகுறித்து பேசியிருந்த லோகேஷ், கைதி 2, விக்ரம் 2 இந்த இரண்டும் தான் இனி LCU ஜானர் படங்களாக உருவாகும். ரோலக்ஸ் தனிப் படமாக வரும் எனத் தெரிவித்திருந்தார். முக்கியமாக கமலின் விக்ரம் 2 தான் LCU-க்கு முடிவாக இருக்கும் எனவும் கூறியிருந்தார். அதேநேரம், LCU உருவானது பற்றி லோகேஷ் ஒரு ஷார்ட் ஃபிலிம் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் குறித்து கைதி, விக்ரம் படங்களில் நடித்திருந்த நரேன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஓடும் இந்த ஷார்ட் ஃபிலிம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. இது சக்சஸ் ஆனால் LCU-ல் வந்த முக்கியமான கேரக்டர்களின் பின்னணியை தனித்தனி படங்களாக எடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். ஆனால், அந்த படங்களை அவர் இயக்கப் போவதில்லை என்பது தான் ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் மொத்தமே 10 படங்களுக்கு மேல் இயக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் LCU இல் வரும் கேரக்டர்களை வைத்து உருவாகும் படங்களை, தனது அசிஸ்டெண்ட்ஸ் இயக்க, லோகேஷ் சொந்தமாக தயாரிக்க முடிவு செய்துள்ளாராம். இது படங்களாகவோ அல்லது வெப் சீரிஸ்களாகவோ உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது. லோகேஷ் இயக்கவில்லை என்றாலும் அவர் தான் LCU கேரக்டர்களின் ஸ்க்ரிப்ட் எழுதுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











