Lokesh Kanagaraj: "தொடங்கிய இடத்தில் முடியும்... விக்ரம் 2 தான் கடைசி..” ஷாக் கொடுத்த லோகேஷ்!
சென்னை: கோலிவுட்டின் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
தற்போது அவர் இயக்கியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது.
இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் விக்ரம் 2 படம் பற்றியும் தனது LCU எப்போது முடிவுக்கு வரும் எனவும் லோகேஷ் மனம் திறந்துள்ளார்.

விக்ரம் 2 தான் கடைசி
மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், அதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்த கைதியை இயக்கினார். இந்தப் படம் கொடுத்த சூப்பர் ஹிட் தான் அடுத்தடுத்து விஜய், கமல், ரஜினி என கோலிவுட் மாஸ் ஹீரோக்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது.
முக்கியமாக கைதியில் இருந்து ஒரு லீட் எடுத்து விக்ரம் படத்தில் இணைத்திருந்தார் லோகேஷ். இங்கிருந்து தான் லோகேஷ் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட் உருவானது. இதுவரை ஹாலிவுட்டில் மட்டுமே காணப்பட்ட யூனிவர்ஸ் படங்களை கோலிவுட்டிலும் அறிமுகப்படுத்தினார். இதனால், லோகேஷ் கனகராஜ்க்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதோடு அவர் இயக்கும் படங்கள் லோகி யூனிவர்ஸில் வருமா என்பதே முதல் கேள்வியாக முன்வைத்தனர்.
அப்படியே விஜய்யின் லியோவும் LCU-ன் கீழ் வருமா என ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆனால், இதுபற்றி லோகேஷ் இன்னும் அபிஸியலாக அப்டேட் கொடுக்கவில்லை. அதேநேரம் லியோவில் கண்டிப்பாக சர்ப்ரைஸ் இருக்கும் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், லியோ ப்ரொமோஷன் பேட்டிகளில் ரஜினியின் தலைவர் 171 படம் பற்றியும் பேசியிருந்தார். அப்போது இந்தப் படம் LCU இல் வராது எனவும், இது சூப்பர் ஸ்டார் வெர்ஷன் எனவும் கூறியிருந்தார்.

அதேபோல், விக்ரம் படத்தில் இருந்து தான் LCU என்ற கான்செப்ட் உருவானதாகவும், கமல் சார் ஓக்கே சொன்னதால் தான் இது சாத்தியமானது எனவும் பேசியிருந்தார். அதேநேரம் கைதி, விக்ரம் படங்களின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்றார். இந்த இரண்டு படங்களுமே LCU-ன் கீழ் வரும் என்றும் அவர் கூறியது ரசிகர்களிடம் அதிக ஹைப் கொடுத்துள்ளது.
முக்கியமாக விக்ரம் 2ம் பாகம் தான் LCUன் கடைசிப் படமாக இருக்கும் என்பதையும் லோகேஷ் கன்ஃபார்ம் செய்துவிட்டார். விக்ரம் 2ம் பாகம் எடுக்க கமல் சார் ரெடியாக இருப்பதாகவும் தலைவர் 171, கைதி 2ம் பாகம் முடிந்த பின்னரே அதற்கான வேலைகள் தொடங்கும் என்பதையும் லோகேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மொத்தமே 10 படங்கள் மட்டுமே இயக்குவேன் என லோகேஷ் கனகராஜ் கூறியதும் ரசிகர்களுக்கு ஷாக்கிங்காக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











