Lokesh Kanagaraj: ரஜினியின் தலைவர் 171 சம்பவம் லோடிங்... லோகேஷ் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா..?
சென்னை: ஜெயிலர் படத்தின் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
அதனைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியின் தலைவர் 171 படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்.
சூப்பர் ஸ்டார் ரஜினி - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
இதற்காக லோகேஷ் கனகராஜ்ஜுக்கு பல கோடிகளை சம்பளமாக கொட்டிக் கொடுத்துள்ளதாம் சன் பிக்சர்ஸ்.

லோகேஷ் கனகராஜ் சம்பளம்: மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்த லோகேஷ், கார்த்தியின் கைதி மூலம் கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார். இதனால், அடுத்தடுத்து விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இதுவரை லோகேஷ் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே ரசிகர்களின் வரவேற்புடன் சூப்பர் ஹிட் அடித்தது.
இதனால், லோகேஷின் மார்க்கெட் வேல்யூ தாறுமாறாக உச்சம் தொட்டுள்ளதோடு, கோலிவுட்டின் டாப் மோஸ்ட் வான்டட் இயக்குநராக வலம் வருகிறார். இந்நிலையில், லோகேஷ், இயக்கியுள்ள விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ அப்டேட்டுக்காக காத்திருந்த லோகேஷ் ரசிகர்களுக்கு, சர்ப்ரைஸ்ஸாக தலைவர் 171-ன் அபிஸியல் அப்டேட் வெளியாகி ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராகவும், அன்பறிவ் பிரதர்ஸ் ஸ்டண்ட் மாஸ்டர்களாகவும் கமிட்டாகியுள்ளனர். மேலும், தலைவர் 171 ஷூட்டிங் அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கும் எனவும், தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லால் சலாம், தலைவர் 170-ஐ தொடர்ந்து தலைவர் 171 படமும் ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்தப் படத்திற்காக லோகேஷ் வாங்கவிருக்கும் சம்பளம் குறித்தும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. மாநகரம், கைதி படங்களுக்காக லட்சங்களில் சம்பளம் வாங்கிய லோகேஷ், மாஸ்டர் இயக்கிய போது கோடிகளில் வாங்கத் தொடங்கினார். விக்ரம் படத்திற்காக 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. தற்போது இயக்கியுள்ள லியோ படத்திற்காக 30 முதல் 35 கோடி ரூபாய் வரை சம்பளம் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லியோ திரைப்படம் தான் கோலிவுட்டின் முதல் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தலைவர் 171 படத்திற்காக லோகேஷுக்கு மிகப் பெரிய ஆஃபர் கொடுத்துள்ளதாம் சன் பிக்சர்ஸ். அதன்படி 60 முதல் 70 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வங்கும் இயக்குநர்களில், லோகேஷ் தான் தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











