Lokesh Kanagaraj: ”கடைசியில் கமலையே டீலில் விட்ட லோகேஷ்..” தலைவர் 171-ஆல் தள்ளிப்போன விக்ரம் 2?
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனையடுத்து லியோ ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

அப்போது பேசிய லோகேஷ், அடுத்தடுத்து அவர் இயக்கவுள்ள படங்கள் குறித்து விவரித்தார்.
அதில் கமல்ஹாசனின் விக்ரம் 2 பற்றி லோகேஷ் கொடுத்த அப்டேட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கமலையே டீலில் விட்ட லோகேஷ்
மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே முத்திரை பதித்த லோகேஷுக்கு, கார்த்தியுடன் இணைந்த இரண்டாவது படமான கைதி அவரை உச்சம் கொண்டு சென்றது. இதனால் விஜய்யுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம் என அடுத்தடுத்து ஜாக்பாட் அடித்தன. இதில் விக்ரம் திரைப்படம் விஸ்வரூப வெற்றிப் பெற்றது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், செம்பன் வினோத், நரேன் என மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவான விக்ரம், கடந்தாண்டு வெளியாகி 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 2023ல் கோலிவுட்டின் ஒரே இண்டஸ்ட்ரி ஹிட் படமாக விக்ரம் அமைந்தது. இதனால், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

மாஸ்டரைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால், லியோ ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் லியோவைத் தொடர்ந்து லோகேஷின் இயக்கத்தில் தலைவர் 171 உருவாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 171, லோகேஷின் தரமான சம்பவமாக இருக்கும் எனலாம்.
அதேநேரம் திடீரென தலைவர் 171 படத்தில் கமிட்டான லோகேஷ், கார்த்தியின் கைதி 2 படத்தின் ஷூட்டிங்கை தள்ளி வைத்துள்ளார். அதன்படி கைதி 2 ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் இரும்பு கை மாயாவி, ரோலக்ஸ் படங்களையும் இயக்கவுள்ளார். முன்னதாக கைதி 2 படத்துக்குப் பின்னர் விக்ரம் இரண்டாம் பாகத்தை இயக்கவிருந்தார் லோகேஷ் கனகராஜ்.
ஆனால், நடுவில் திடீரென தலைவர் 171ல் கமிட்டானதால், விக்ரம் 2ம் பாகத்தை இயக்கும் வாய்ப்பும் தள்ளிபோய்விட்டது. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், ரஜினியின் தலைவர் 171 படத்துக்காக இப்போது உலக நாயகனையே டீலில் விட்டுள்ளார். தலைவர் 171, கைதி 2, இரும்பு கை மாயாவி, ரோலக்ஸ் படங்களை முடித்துவிட்டு தான் விக்ரம் 2 அப்டேட் வெளியாகும் என்பதால், கமல் ரசிகர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











