முதலமைச்சர் விஜய்யை சந்தித்த லோகேஷ் கனகராஜ்.. லியோ 2 படத்தை லாக் பண்ணி விடுண்ணே.. ரசிகர்கள்!
சென்னை: லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் முதலமைச்சராக மாறினால் லோகேஷ் கனகராஜுக்கு என்ன துறை கொடுப்பீங்க என கற்பனையாக கேட்கப்பட்டது. அதற்கு போதைப்பொருள் ஒழிப்புத்துறை கொடுப்பேன் என விஜய் கூறியிருந்தார். விஜய்க்கு ஓட்டுப்போட கூட லோகேஷ் கனகராஜ் வரவில்லை என பஞ்சாயத்து வெடித்த நிலையில், தற்போது தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
லியோ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் அதன் 2ம் பாகத்துக்காக லோகேஷ் கனகராஜ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். லியோ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கிய லோகேஎஷ் கனகராஜ் லியோ படத்தை விட அதிகளவில் ட்ரோல்களை சந்திக்க சோஷியல் மீடியாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப் போவதாக அறிவித்தார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டிசி படத்தில் ஹீரோவாக நடித்து வரும் லோகேஷ் கனகராஜ் விரைவில் அந்த படம் வெளியாகவுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேசியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய்யை சந்தித்த லோகேஷ் கனகராஜ்: மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கார்த்தியை வைத்து கைதி படத்தை விஜய்யின் பிகில் படத்துக்குப் போட்டியாக வெளியிட்டு ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார். விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ என 2 படங்களை இயக்கி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பரிசளித்தார். கமல்ஹாசனுக்கு விக்ரம் எனும் இண்டஸ்ட்ரி ஹிட் படத்தையும் கொடுத்தார். கூலி படம் சொதப்பிய நிலையில், ஹீரோவாக நடித்து வரும் லோகேஷ் கனகராஜ் முதலமைச்சர் விஜய்யை இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
லியோ 2 வேண்டும்: லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், அந்த போட்டோவுக்கு கீழ் தளபதி ரசிகர்கள் முதலமைச்சர் விஜய்யை வைத்து லியோ 2 படம் பண்ணி விடுண்ணே என கமெண்ட் போட்டு வருகின்றனர். அரசியலுக்கு வந்ததும் சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டேன் என விஜய் சொல்லிவிட்டார். ஜன நாயகன் படம் தான் கடைசி படம் எனக் கூறப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்தின் சென்சார் பஞ்சாயத்து முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications