சோலி முடிஞ்சிடுச்சு.. வலிமை இயக்குநரும் மாஸ்டர் இயக்குநரும் ஒன்னு கூடிட்டாங்க.. ரசிகர்கள் எப்போ?
சென்னை: தல அஜித்தும் தளபதி விஜய்யும் எப்போதுமே நட்பாகத்தான் உள்ளனர்.
அதே போல, தங்களது ரசிகர்களையும் மற்ற ஹீரோக்களை இழிவாக பேச வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர்.
ஆனால், ரசிகர்கள் தங்களது ஹீரோக்களின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து ஆபாச கமெண்ட்டுகளையும் மீம்களையும் போட்டு வருகின்றனர்.

ட்விட்டர் வார்
போஸ்டர்களை கிழிப்பது, தியேட்டரில் ரகளை என்பதை எல்லாம் தாண்டி தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் மோசமான டிரெண்டிங் சண்டையை போட்டு வருகின்றனர். அதிலும் ட்விட்டர் வார் வேற லெவல் சாக்கடை. ஆனாலும், இந்த சண்டை ஓய்ந்து விட்டால் ஹீரோவின் பிம்பம் இருக்காது என சிலர் நம்புவதாலே, மாஸ்டர் படத்தில் விஜய் சொல்வது போலவே அந்த போதை சினிமா அரசியலில் ரசிகர்களை வைத்து கல்லா கட்டுகின்றனர்.

யாருக்கு அதிகம்
எந்த நடிகருக்கு அதிக ரசிகர்கள் உள்ளார்களோ அவர் தான் சினிமாவில் கிங் என்றும், கலெக்ஷன் மன்னன் என்றும் கூறுவதாலே இதுபோன்ற ரசிகர்கள் சண்டை தேவையில்லாமல் தொடர்கிறது. டாப் ஹீரோக்களும் தங்களது ரசிகர்களுக்காக படம் பண்ணுகிறேன் என்கிற பேர் வழியில் கமர்ஷியல் படங்களாகவே கொடுத்து வருகின்றனர்.

கண்ணியம் வேண்டும்
அஜித் ரசிகர்கள் விஜய் மற்றும் அவரது குடும்பத்தை தப்பா பேசியும், மோசமான போட்டோக்களை எடிட் செய்து மீம் போட்டும், விஜய் ரசிகர்கள் அஜித் மற்றும் அவரது குடும்பத்தை இழிவுபடுத்தியும் செய்யும் இதுபோன்ற கேவலமான செயல்கள் வேண்டாம் என தல மற்றும் தளபதி பல்வேறு முறை சொன்னாலும் ரசிகர்கள் அந்த கண்ணியத்தை காக்க மறுக்கின்றனர்.

மாஸ்டரும் வலிமையும்
இந்நிலையில், தல தளபதி ரசிகர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக தற்போது மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜும், வலிமை பட இயக்குநர் வினோத்தும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு மறைமுகமாக ஒன்றாக இருங்கப்பா என அட்வைஸ் கூறியுள்ளனர்.

ஏன்டா அடிச்சிக்கனும்
அஜித் - விஜய், வினோத் - லோகேஷ், இப்படி எல்லாரும் ஒன்னா நட்பா இருக்கும் போது அவர்களோடே ரசிகர்கள் மட்டும் ஏன்டா அடிச்சிக்கனும்.. இனிமேவாச்சும் தயவு செய்து சண்டை போடாம இருங்க நண்பாஸ்.. உண்மையில தல ரசிகர்கள் நண்பன் தளபதி ரசிகனாக தான் இருப்பான்" என இந்த அஜித் ரசிகரும் சூப்பரான கமெண்ட் செய்துள்ளார்.

இதுக்கு ஒன்னும் குறையில்லை
நண்பர் அஜித் என விஜய் சொன்னதும் அந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து நண்பர்கள் ஆகிட்டோம் என இருவரும் ஒன்றாக இணைந்து டிரெண்ட் செய்தனர். தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் வினோத் போட்டோவை வைரலாக்கி #HVinoth ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











