Lokesh Kanagaraj: ஒரெயொரு மீம்... லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸை சல்லி சல்லியாக உடைத்த நெட்டிசன்கள்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் லியோ திரைப்படமும் இணைந்துள்ளது சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
இதனால் லியோவுக்கு நல்ல ஓபனிங் கிடைத்திருந்தாலும் சில நெகட்டிவான விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஒரேயொரு மீம்ஸ் போட்டு லோகேஷையும் நெல்சனையும் சோலி முடித்துள்ளனர் நெட்டிசன்கள்.

தள்ளாடும் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸ்
மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ், தற்போது லியோவுடன் வைப் கொடுத்துள்ளார். விஜய் நடித்துள்ள லியோ லோகேஷ் இயக்கத்தில் மூன்றாவது LCU படமாக உருவாகியுள்ளது. விஜய் - லோகேஷ் காம்போவில் லியோ முதல் LCU திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
லியோ ஷூட்டிங் தொடங்கிய நாள் முதலே, இந்தப் படத்திற்கு அதிகளவில் ஹைப் கொடுக்கப்பட்டது. அதனால் ப்ரீ தியேட்டர் பிஸினஸ், ஓடிடி ரைட்ஸ் உட்பட அனைத்தும் பல கோடிகளில் விலை போயின. இந்நிலையில் இன்று வெளியான லியோ, இந்த எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் லோகேஷ் வழக்கம்போல குண்டு சட்டியில் குதிரை ஓட்டி ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளன.
Drug Free Society தான் தனது விருப்பம் என சொல்லிவிட்டு, படம் முழுக்க கஞ்சா, புகை பிடிக்கும் காட்சிகளை வைத்து அதே உருட்டை தான் திரும்பவும் உருட்டியுள்ளார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களின் கலவை தான் லியோ என கூறியுள்ளனர். மேலும், லோகேஷை போலவே நெல்சனும் ஒரே மாதிரியான கதையை தான் எடுத்து வருவதாக மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் சூப்பர் ஹிட் அடித்தது. ரஜினி நடித்திருந்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. ஜெயிலரும் நெல்சனின் ஒரே ஃபார்முலா கதை தான் என ட்ரோல் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் தொடங்கி ஜெயிலர் வரை கடத்தலை பின்னணியாக வைத்தே படம் இயக்கியுள்ளார் நெல்சன்.

இதனையே மீம் கன்டென்ட்டாக வைத்து லோகேஷையும் நெல்சனையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்துள்ளனர். தலைநகரம் படத்தில் வரும் வடிவேலுவின் காமெடியான, "ஒருத்தன் கருப்பா பயங்கரமா இருப்பான்.. இன்னொருத்தன் பயங்கர கருப்பா இருப்பான்" டயலாக்கை வைத்து ட்ரோல் செய்துள்ளனர். அதில் ஒருத்தன் கருப்பா பயங்கரமா இருப்பான் என்பது நெல்சன் என்றும், பயங்கர கருப்பா இருப்பான் என லோகேஷையும் குறிப்பிட்டு ட்ரோல் செய்துள்ளனர். இந்த மீம் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











