எவனென்று நினைத்தாய்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் மிரட்டப்போகும் 232வது படம்!

சென்னை: மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

லோகேஷ் கனகராஜ் படத்தில் கமல ஹாசன்.. வெளியான Kamal Hassan 232 போஸ்டர்

ஏற்கனவே எதிர்பார்த்த படி உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து 'எவனென்று நினைத்தாய்' என்ற தலைப்பில் இந்த படத்தை இயக்கப் போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கமல் ரசிகர்கள் மற்றும் தளபதி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

232வது படம்

232வது படம்

களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய உலக நாயகன் கமல்ஹாசனின் திரைப் பயணத்தில் 232வது படமாக எவனென்று நினைத்தாய் அமையவிருக்கிறது. விஸ்வரூபம் படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடல் வரிகளையே டைட்டிலாக வைத்து ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ராஜ்கமல் தயாரிப்பு

ராஜ்கமல் தயாரிப்பு

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு படம் இயக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முடிந்து அந்த படம் வெளியாகவே தாமதம் ஆகும் என்பதால், அதற்கு முன்னதாக கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க லோகேஷும் கமலும் முடிவு செய்துள்ளனர்.

மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்

மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்

கைதி படத்தில் ஒரே ஒரு மிஷன் கன்னை வைத்துக் கொண்டு மிரட்டிய லோகேஷ் கனகராஜ், எவனென்று நினைத்தாய் படத்தின் போஸ்டரில் கமல் ஹாசனின் உருவ தோற்றத்தில் ஏகப்பட்ட துப்பாக்கிகளை அடுக்கி வைத்து மிரட்டுகிறார். கைதி படத்தை போல இந்த படத்தின் ட்ரீட்மென்ட்டும் புதுசா இருக்கும் என்றே தெரிகிறது.

தீவிர ரசிகன்

தீவிர ரசிகன்

நடிகர் கமலின் தீவிர ரசிகன் என மேடைக்கு மேடை சொல்லி வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனக்கு பிடித்த நடிகரையே இயக்கும் பாக்கியத்தை பெற்றுள்ளார். கமலும், லோகேஷும் இணையும் இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு புது அனுபவத்தை தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

மேலும், இந்த படம் வரும் 2021ம் ஆண்டு சம்மரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகப் போவது இதன் மூலம் உறுதியாகி உள்ளது என விஜய் ரசிகர்கள் குஷியாகி மாஸ்டர் இயக்குநரை வாழ்த்தி வருகின்றனர்.

ஹாரர் மூவியா

ஹாரர் மூவியா

Once upon a time there lived a ghost என கேப்ஷன் கொடுத்துள்ள நிலையில், கமல்ஹாசன் மட்டுமே சோலோவாக நடிக்க உள்ள பேய் படமா? என்கிற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும், நிச்சயம் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் தான் டா என உலக நாயகன் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக் கொண்டு சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X