கமலுக்காக 3 ஆண்டுகளாக காத்திருக்கும் ரசிகர்கள்... லோகேஷ் கனகராஜ் கொடுத்த ப்ராமிஸ்

சென்னை : இந்தியன் 2 விவகாரம் எப்போது முடியும் என தெரியாததால், தேர்தல் வேலைகளை முடித்த கையோடு புதிய படத்தின் வேலைகளில் இறங்கி விட்டார் கமல். மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் கமல் நடிக்க உள்ளார்.

கைதி படத்தை தொடர்ந்து மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் படமானதால் லோகேஷ் கனகராஜின் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதுவும் கமல் படம் என்பதாலும், படம் பற்றி அடுத்தடுத்து வெளியிடப்பட்ட அப்டேட்களும் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளன.

3 ஆண்டுகளாக ஆக்ஷன் இல்லை

3 ஆண்டுகளாக ஆக்ஷன் இல்லை

கடைசியாக கமல் நடித்த விஸ்வரூபம் 2018 ல் ரிலீசானது. இதில் தான் கமல் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருந்தார். அதற்கு முன் 2015 ல் வெளிவந்த பாபநாசம் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் கிடையாது. அது த்ரில்லர் கதை மட்டுமே.

பிரம்மாண்ட ஆக்ஷன் ரெடி

பிரம்மாண்ட ஆக்ஷன் ரெடி

கமலின் ஆக்ஷன் காட்சிகளை பார்க்க 3 ஆண்டுகளாக காத்திருக்கும் அவரது ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காக இந்த படத்தில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகளை வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு அன்பறிவு ஸ்டன்ட் அமைப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒளிப்பதிவை கிரிஷ் கங்காதரன் தான் செய்ய உள்ளார் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளார்.

Recommended Video

Kamal Hassan Biography | கமல்ஹாசன் வாழ்க்கை வரலாறு | Kamalகு இத்தனை காதலியா
கமலுக்கு 5 வில்லன்கள்

கமலுக்கு 5 வில்லன்கள்

இந்த படத்தை பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக அமைப்பதற்காகவோ என்னவோ இந்த படத்தில் 5 வில்லன்களை வைத்துள்ளார். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோருடன் ஐந்தாவது வில்லனாக மற்றொரு முன்னணி அதிரடி ஹீரோவை நடிக்க வைக்க போகிறார்களாம்.

டைரக்டர் தந்த ப்ராமிஸ்

டைரக்டர் தந்த ப்ராமிஸ்

அத்துடன் விரைவில் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட உள்ளதாக லோகேஷ் கனகராஜ் வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் அடுத்தடுத்த சூப்பர் அப்டேட்கள் விக்ரம் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதாக நிச்சயம் இருக்கும் என நம்பப்படுகிறது. இது கமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X