காஸ்ட் அப்டேட்டுக்கும் இதே மாதிரி போட்டோ விடுவீங்களா.. லோகேஷ் கனகராஜை பங்கமாக கலாய்த்த ரத்னகுமார்!

சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் இணைந்துள்ளார் என்பதை போட்டோ போட்டு அறிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

அவரது ட்வீட்டை பார்த்த மறுகணமே ஆஜராகி கலாய்த்துள்ளார் மாஸ்டர் படத்தின் வசனகர்த்தா ரத்னகுமார்.

விரைவில் விக்ரம் படத்தின் காஸ்ட் அப்டேட் வெளியாகும் என அறிவித்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளார் மாஸ்டர் இயக்குநர்.

விக்ரமா? பாபநாசம் 2வா?

விக்ரமா? பாபநாசம் 2வா?

இந்தியன் 2 படம் பிரச்சனை காரணமாக டிராப் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க போவதாக அறிவித்தார். பாபநாசம் 2 படத்தை அதற்கு முன்னதாக எடுக்க கமல் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அடுத்து வெற்றிமாறன்

அடுத்து வெற்றிமாறன்

இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் படங்கள் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், விக்ரம், பாபநாசம் 2 என லைன் அப்புகள் உள்ள நிலையில், அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

லோகேஷ் உறுதி

லோகேஷ் உறுதி

ஆனால், முதலில் கமல் என் படத்தில் தான் நடிப்பார் என்கிற நம்பிக்கையுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து விக்ரம் படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். விக்ரம் படம் தொடர்பான அடுத்த அடுத்த அப்டேட்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

கிரிஷ் கங்காதரன்

கிரிஷ் கங்காதரன்

இந்நிலையில், தற்போது கமலின் விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளராக பிரபல ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதாரன் இணைந்துள்ள அறிவிப்பை அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். நடிகர் விஜய்யின் சர்கார், மலையாளத்தில் வெளியாகி ஆஸ்கருக்கு இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு, சமீபத்தில் வெளியான பிருத்விராஜின் கோல்ட் கேஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கிரிஷ் கங்காதரன்.

நடிகர்கள் அறிவிப்பு

நடிகர்கள் அறிவிப்பு

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லனாக நடிகர் பகத் ஃபாசில் இணைய உள்ளார். மேலும், நடிகர் விஜய்சேதுபதியும் இந்த படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. ஹீரோயினாக யார் நடிப்பார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், காஸ்ட் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

ரத்னகுமார் கலாய்

ரத்னகுமார் கலாய்

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நண்பரும் ஆடை பட இயக்குநருமான ரத்னகுமார், பிதாமகன் படத்தில் இருந்து லைலாவின் போட்டோவை போட்டு, காஸ்ட் அப்டேட்டுக்கும் இதே மாதிரி போட்டோ விடுவீங்களா என ரத்னகுமாரை பங்கமாக கலாய்த்துள்ளார் ரத்னகுமார்.

சந்தானம் பட அப்டேட்

சந்தானம் பட அப்டேட்

நீங்களும் விக்ரம் படத்தில் இருக்கீங்களா என ரசிகர்கள் ரத்னகுமாரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், நடிகர் சந்தானத்தை வைத்து அடுத்து நீங்கள் இயக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட்டை எப்போ சொல்வீங்க அப்டேட் குரு என ஏகப்பட்ட சந்தானம் ரசிகர்களும் ரத்னகுமாரை கார்னர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X