Loki: கூலி அடுத்து கைதி 2 இல்லையாம்.. கடைசியில் வேற அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. ரசிகர்கள் ஷாக்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படம். மேலும் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 50 வது ஆண்டில் இந்த படம் வெளியாகவுள்ளதால் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அண்மையில் அளித்த பேட்டியில் கூலி படத்திற்கு பிறகு அவர் கைது 2 படத்தில் பணியாற்ற போவதில்லை எனவும், அதற்கு முன்னர் வேறு ஒரு படத்தில் கமிட் ஆகி விட்டதாகவும் கூறியுள்ளார்.

விஜய் டிவி கோபிநாத்திற்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அதில், " கூலி படத்தை எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் எடுத்து முடித்துள்ளேன். படத்தை ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே நாங்கள் முடித்துவிட்டோம். கடந்த இரண்டு நாட்களாக படத்தின் டிரைலர் கட் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆகஸ்ட் 2ஆம் தேதி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகவுள்ளது.

Lokesh Kanagaraj Opens About His Debut Acting Film After Coolie And Before Kaithi 2
Photo Credit:

கைதி 2: கூலி படத்திற்குப் பின்னர், நான் இயக்கவுள்ள படம் கைதி 2. கைதி 2 படம் தான் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடிப்படையே அதுதான். இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருக்கும் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும் வரும். இது மட்டும் இல்லாமல் கைதி, விக்ரம், லியோ கதாபாத்திரங்கள் இந்த படத்தில் வரும். இந்த படத்தின் ப்ரீ புரெடக்‌ஷன் பணிகளைத் தொடங்கவே எனக்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது.

அருண் மாதேஸ்வரன் படம்: எனவே நான் இயக்குநர் அருண் மாதேஸ்வரனை அழைத்து இதுபோல எனக்கு 8 மாத காலம் உள்ளது. அந்த இடைவெளியில் அவரது இயக்கத்தில் நான் கமிட் ஆன படத்தை முடிக்க முடியுமா என்று கேட்டேன். அருண் கதை கூறினார், எனக்கு மிகவும் பிடித்துப் போனது. கூலி படம் ரிலீஸ் ஆன பின்னர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கிறேன். அந்த படத்தில் நடிப்பதற்காக தான் தாடி எல்லாம் வளர்த்துக் கொண்டு உள்ளேன். எனவே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நான் நடிக்கும் கேங்ஸ்டர் படத்தை முடித்த பின்னர்தான் கைதி 2 படத்தின் ப்ரீ புரெடக்‌ஷன் வேலைகளையே தொடங்குவேன்" என்று கூறியுள்ளார். மேலும் ஒரு படம் முடிந்த பின்னர் எங்காவது ஜாலியாக நண்பர்களுடன் ஊர் சுற்ற போய்விடுவேன். ஆனால் இப்போது அதற்கு பதிலாக படத்தில் நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன் என்றும் கூறினார்.

Lokesh Kanagaraj Opens About His Debut Acting Film After Coolie And Before Kaithi 2
Photo Credit:

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: கைதி 2 படம் என்றதும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கும் விஷயம் என்றால் அது டில்லி அதாவது கார்த்தியும் ரோலக்ஸ் அதாவது சூர்யாவும் நேருக்கு நேர் சண்டை செய்யும் காட்சிகள் இருக்குமா என்பதுதான். கூலி படம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருகிறதா என்ற கேள்விக்கு, கூலி படம் அந்த வரிசையைச் சேர்ந்தது அல்ல. அது தனி படம். கூலி படம் முடியும் போது முழு படமாக முடிந்துவிடும். வேண்டும் என்றால் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கலாம் என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X