Leo: எனக்கும் விஜய் அண்ணாவுக்கும் சண்டையா.. ஒரே போடாக போட்ட லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

Lokesh Kanagaraj about Vijay: நடிகர் விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பெரிய சண்டையே நடப்பதாக விஜய் ஹேட்டர்கள் கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்து வந்த நிலையில், அந்த விஷயம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

லியோ படத்தின் ரிலீஸை முன்னிட்டு ஆடியோ லான்ச் மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட எதுவும் தயாரிப்பு தரப்பில் இருந்து நடைபெறாது என்றே தெரிகிறது. இந்நிலையில், லியோ படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தனது பங்குக்கு படத்தின் புரமோஷனை ஆரம்பிக்க யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுக்க தொடங்கியுள்ளார்.

150 பேர் கட்டி இழுத்துட்டுப் போவாங்க: லியோ படத்தில் ஒரு சண்டை காட்சியில் சுமார் 150 பேர் நடிகர் விஜய்யை கட்டி இழுத்து செல்வார்கள், அந்த காட்சியில் டூப் வைக்கலாம் என்று சொன்னோம். வேற ஆள் கையை காட்டினால் கூட என் ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள், டூப் மட்டும் வேண்டாம் என சொல்லி விஜய் அண்ணாவின் நடித்தார்.

Lokesh Kanagaraj opens up about Fight rumours between him and Actor Vijay

பல பேர் நகம் எல்லாம் அந்த காட்சியின் போது கீறி இருக்கும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் பயங்கர வெறித்தனமாக அந்த சண்டைக் காட்சியில் நடித்து இருந்தார்.

சண்டைலாம் இல்லைங்க: எனக்கும் விஜய் அண்ணாவுக்கும் சண்டை என சோசியல் மீடியாவில் வந்த போஸ்ட்டை நானும் விஜய் அண்ணாவும் ஒன்றாகத்தான் பார்த்தோம். இருவரும் அதைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தோம். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க அப்படின்னு சொன்னாரு.. மாஸ்டர் படத்திலிருந்து அண்ணா என உரிமையுடன் நடிகர் விஜய் மட்டும் தான் கூறி வருகிறேன். அந்த அளவுக்கு உரிமைக் கொடுத்துள்ள நபர் அவர் மட்டும்தான் என பேசி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.

ஆடியோ லான்ச் நடக்காதது ஏன்?: 70 ஆயிரம் ரெக்வஸ்ட் வந்துடுச்சு, கண்டிப்பாக அடியோ லான்ச் நடத்தினால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்டதை போல ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் என நினைத்து தான் வேண்டாம் என்கிற முடிவை விஜய் அண்ணா மற்றும் லியோ படக்குழுவினர் ஒன்றாக சேர்ந்து எடுத்தோம் என்றும் அதற்கும் விளக்கம் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X