தலைவர் 171 கதை ரெடி பண்ணாம ஸ்ருதிஹாசனுக்காக லோகேஷ் வர காரணமே இதுதானாம்?.. செம ட்விஸ்ட்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்து வந்த நிலையில், நடிகர் விஜயை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் மற்றும் லியோ படங்கள் அதிக அளவில் விமர்சனங்களை சந்தித்தன. மாஸ்டர் படத்தில் கூட கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டுமே கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், லியோ படம் வசூல் ரீதியாக கடந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையிலும் படத்தின் இரண்டாம் பாதி குறித்து அதிக அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு படம் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே லோகேஷ் கனகராஜ் இடம் படம் சரியாக இல்லை என்றும் இரண்டாம் பாதியில் சில மாற்றங்களை செய்யுங்கள் என்றும் கூறியதாகவும் ஆனால் அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என சொல்லி பேசுவதை நிறுத்தி விட்டார் என சமீபத்தில் பகீர் கிளப்பி இருந்தார்.

அடுத்து தலைவர் 171: லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தின் தலைவர் 171 வது படத்தை இயக்க உள்ளார். வேட்டையின் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தலைவர் 1711 வது படம் பூஜையுடன் ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திடீரென ராஜ்கமல் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு ரஜினிகாந்த் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்ருதிஹாசனுக்கு ஜோடி: 96 விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா போல லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இதுக்கு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு புரியாத பாஷையில் ஒரு புதிய அப்டேட்டை ராஜ்கமல் நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விஸ்ட் இருக்கு: ராஜ்கமல் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அது ஒரு ஆல்பம் பாடல் தான் என்கிற அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. ஸ்ருதிஹாசன் தான் இந்த பாடலை எழுதி இசையமைத்து இயக்கப் போகிறார் என்றும் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஜோடி சேர்ந்து நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்கள் வரும் என்றும் தலைவர் 171 படத்திற்காகத்தான் லோகேஷ் கனகராஜ் உழைத்து வருகிறார் என்றும் இடையே ஒரு சின்ன கேப்பில் இந்த ஆல்பம் பாடல் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் காதலர் தினத்துக்கு வெளியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











