அடுத்து அஜித், ரஜினி தான்.. விக்ரம் வெற்றி.. சந்தோஷத்தில் லோகேஷ் கனகராஜ் அம்மா, அப்பா!

சென்னை: ஒரு படத்தை ஹிட் கொடுத்தால் இயக்குநர் கொண்டாடப்படுவதும், தோல்வியாக முடிந்தால் ட்ரோல் செய்து நொறுக்கப்படுவதும் சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் அதிகளவில் காண முடிகிறது.

தமிழ் சினிமாவிலே தற்போது அதிக சந்தோஷத்தில் இருப்பது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான்.

அவரை விட அதிக சந்தோஷமாக இருப்பது யார் என்றால் அவரை ஈன்ற பெற்றோர்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இந்நிலையில், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அம்மா, அப்பா அளித்த பேட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

4 வெற்றி படங்கள்

4 வெற்றி படங்கள்

ஏதோ ஒரு ஹிட் கொடுத்துட்டு இங்க வரல.. நான் எடுத்தது 4 படங்களுமே ஹிட் தான் என லோகேஷ் கனகராஜுக்கு கேஜிஎஃப் ராக்கி பாய் டயலாக் மீமை போட்டு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்

அம்மா, அப்பா

அம்மா, அப்பா

லோகேஷ் கனகராஜின் அம்மா மற்றும் அப்பா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர். அதில், லோகேஷ் கனகராஜின் கடுமையான உழைப்பு மற்றும் அவர் குறித்த ஏகப்பட்ட அறியாத தகவல்களை அடுக்கி கூறி உள்ளனர். தனது மகனால் ரொம்பவே பெருமையடைந்துள்ளது அவர்கள் அளித்துள்ள பேட்டியிலேயே தெளிவாக தெரிகிறது.

எனக்கு இன்னொரு அண்ணன்

எனக்கு இன்னொரு அண்ணன்

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யோட கேரக்டர் ரொம்ப நல்ல கேரக்டர்மா, நிறைய விஷயங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்தாரு, எனக்கு இன்னொரு அண்ணன் மாதிரியே இருக்காரு என லோகேஷ் சொல்வார் என அவரது அம்மாவும், அப்பாவும் விஜய் பற்றி பூரிப்புடன் அந்த பேட்டியில் பேசி உள்ளனர்.

அஜித், ரஜினி

அஜித், ரஜினி

கார்த்தி, விஜய், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் லோகேஷ் பணியாற்றி விட்டார். அடுத்ததாக அஜித் மற்றும் ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அவர் பணியாற்ற வேண்டும் என்பது எங்களது விருப்பம். விரைவில், அதற்கான வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என லோகேஷ் கனகராஜின் பெற்றோர்கள் பேசி உள்ளனர்.

Recommended Video

Vikram Public Review | Kamal Haasan | VijaySethupathi | Lokesh Kanagaraj | #vikramfdfs
தளபதி 67

தளபதி 67

தளபதி 66 முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க போகிறார். அந்த படத்தை முடித்ததும் விக்ரம் 3 படத்தை இயக்கப் போகிறாரா அல்லது வேறு எந்த படத்தை இயக்குவார் என்பது தெரியவில்லை. அஜித் மற்றும் ரஜினியுடன் விரைவில் பணியாற்றுவாரா? இல்லை காலதாமதம் ஆகுமா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X