Don't Miss!
- Automobiles மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அந்த படத்துக்கு முன்பாக.. டோலிவுட்டில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம் மாஸ்டர் இயக்குநர்?
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் அவர், அடுத்து எந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.
ப்பா.. எப்டி இப்டில்லாம்.. தலைக்கீழாக நின்று யோகா செய்யும் நடிகை.. செம க்ளீக் என பாராட்டும் ஃபேன்ஸ்!
செம ஸ்பீடு
கம்மி பட்ஜெட்டில் குறைந்த ஷெட்யூலில் தரமான படத்தை இயக்கும் இயக்குநர் என்ற பெயரை தான் இயக்கிய படங்களின் மூலமாக நிரூபித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய இரு படங்களும் அவருக்கு மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்துள்ளன.
சர்வதேச அங்கீகாரம்
டொரோண்டோ பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கைதி திரைப்படம் தேர்வாகி உள்ள சந்தோஷத்தை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். வெறும் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்த அந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
வேற லெவல் எதிர்பார்ப்பு
குறைந்த நடிகர்களை கொண்டு, குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை இயக்கி வந்த லோகேஷ் கனகராஜுக்கு ஜாக்பாட் அடித்தது போல தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை பார்த்திராத ஸ்வாகில் தளபதி விஜய்யை இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் காட்ட உள்ளார். மேலும், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன் என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே இந்த படத்தில் கட்டி மேய்த்துள்ளார்.
ரஜினி, கமல் படம்
மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு மற்றும் ஒரு மெகா ஜாக்பாட்டாக கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தாமதம் ஆகும் என்பதால், உடனடியாக வேறு ஒரு படத்தை முடித்து விட திட்டம் தீட்டி வருகிறார்.
கார்த்தியும் பிசி
கைதி 2 படத்தை 30 நாட்கள் கால்ஷீட் இருந்தால் முடித்து விடலாம் என நினைத்து இருந்த லோகேஷ் கனகராஜ், பொன்னியின் செல்வன், சுல்தான் மற்றும் பி.எஸ். மித்ரன் படங்கள் என பிசியாக இருக்கும் கார்த்தி, இப்போதைக்கு கைதி 2 படத்திற்காக கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலையில், உள்ளார் என்பதால், பக்கத்து மாநிலத்துக்கு படமெடுக்க படையுடன் கிளம்ப போகிறாராம் மாஸ்டர் இயக்குநர்.
தெலுங்கு படம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அதிரடியை அறிந்து கொண்ட தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று, டாப் ஹீரோவின் படம் ஒன்றை இயக்க சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும், கொரோனா தளர்வுகள் விடப்பட்டு, ஷூட்டிங் அனுமதிக்கப்பட்டால், டப்பு டப்புன்னு அந்த படத்தை அண்ணாத்த படம் முடிவதற்குள் முடித்து விட்டு வர லோகேஷ் கனகராஜும் ரெடியாகி விட்டார் என்றே நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்போம்.