Sivakarthikeyan: ஜெயிலரில் மிஸ் ஆனது.. தலைவர் 171ல் சக்சஸ் ஆகிடும் போல தெரியுதே.. செம மேட்டர்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171வது படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலைவர் 171வது படம் எல்சியூ இல்லை என்றும் ஸ்டாண்ட் அலோன் படம் தான் என்றும் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக கூறியிருந்தாலும், அந்த படத்திலும் மல்டி ஸ்டாரர்கள் நடிப்பது உறுதி என்றார்.

இந்நிலையில், ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
கமல் தயாரிப்பில்: சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனாலும், கமல் தயாரிப்பில் நடிக்க அழைத்ததுமே உடனடியாக ஓகே சொல்லி விட்டு நடித்தார். அனைத்து பெரிய நடிகர்களையும் மதித்து நடக்கக் கூடிய நடிகராகவே சிவகார்த்திகேயன் உள்ளது அவரது சிறப்பான குணங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் நடித்து வருகின்றனர். ராணுவ வீரர் ஒருவரின் கதையை மையமாக வைத்து அந்த படம் தயாராகி வருகிறது.
ஜெயிலரில் மிஸ் ஆகிடுச்சு: டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் ரஜினியை வைத்து இயக்கிய ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் சிவராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானதுமே ரஜினிக்கு மகனாக சிவா தான் நடிக்கிறார் என வதந்திகள் பரவின.
ஆனால், அந்த படத்தில் தான் நடிக்கவில்லை என சிவகார்த்திகேயன் விளக்கம் கொடுத்திருந்தார். தரமணி படத்தின் நாயகன் வசந்த் ரவி ரஜினிக்கு மகனாக நடித்திருந்தார்.
தலைவர் 171ல் சிவகார்த்திகேயன்: இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 படத்தில் முதலில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியை லோகேஷ் அணுகியதாகவும் அவர் மறுத்து விட்ட நிலையில், லாரன்ஸை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், ரஜினிக்கு துணையாக பல மல்டி ஸ்டாரர்களை நடிக்க வைக்க முடிவு செய்துள்ள லோகேஷ் கனகராஜ் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக கூறுகின்றனர்.
எப்படி இருந்தாலும், தலைவர் 170 படம் ரிலீஸ் சமயத்தில் தான் தலைவர் 171 படத்தின் நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.


Click it and Unblock the Notifications











