Lokesh Kanagaraj - மாமன்னனை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ்.. லேட்டாகலாம் அதுக்குனு இவ்வளவு லேட்டா
சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) மாமன்னன் படத்தை பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புகழ்ந்து ட்வீட் செய்திருக்கிறார்.
மாரி செல்வராஜ் ராமின் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து தன்னிடம் இருக்கும் திறமையால் அவரிடமே உதவி இயக்குநராக சேர்ந்தார். ராம் இயக்கிய கற்றது தமிழ், தங்க மீன்கள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். இயக்குநராக மாறிவிட்டாலும் ராம் இயக்கிய பேரன்பு படத்தில் மீண்டும் உதவி இயக்குராக மாரி வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.

மாரி செல்வராஜ்: மறக்கவே நினைக்கிறேன், தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கும் அவர் கவிதைகளும் எழுதியிருக்கிறார். கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோரை வைத்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டாகி மாரி செல்வராஜ் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
மாமன்னன்: அதற்கு அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். தாணு தயாரித்த அந்தப் படம் மெகா ஹிட்டாகாவிட்டாலும் சூப்பர் ஹிட்டானது. அதேசமயம் வரலாற்றை திரித்து கர்ணனில் காண்பித்துவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது படமாக மாமன்னனை இயக்கினார். வடிவேலு, ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மெகா ஹிட்: இதுவரை தமிழ் சினிமா தொடாத கதைக்களத்தை தொட்டு தனது வித்தையையும் இறக்கி மாமன்னன் படத்தை மெகா ஹிட் படமாக மாற்றிவிட்டார் மாரி செல்வராஜ். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் விமர்சனம், வசூல் என இரண்டு ப்ளாட்ஃபார்மிலும் ஹிட்டடித்திருப்பது அவருக்கு மிகப்பெரிய நிம்மதியை கொடுத்திருக்கிறது.
ஃபகத் பாசில்: மாமன்னன் படம் சில நாட்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை போலவே ஓடிடி தளத்திலும் பலத்த வரவேற்பு கிடைத்தது. அதேசமயம் சாதி வெறி பிடித்தவராக காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஃபகத் பாசிலை பெரும்பாலான சாதியினர் தங்களது அடையாளமாக மாற்றி எடிட் செய்து வீடியோவை பகிர்ந்தனர். அது பலருக்கும் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியது.
லோகேஷ் பாராட்டு: இந்நிலையில் கோலிவுட்டின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது தாமதம் என்று எனக்குத் தெரியும். 'மாமன்னன்' சிறப்பான திரைப்படம். அனைவருமே சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை. உதயநிதி, மாரிசெல்வராஜ், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் லேட்டா வாழ்த்து சொல்லலாம் அதுக்குனு இவ்வளவு லேட்டா என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











