Fight Club Teaser: லோகேஷ் தயாரிப்பு சரியாத்தான் இருக்கு.. ஒரே சிகரெட் புகையும் சண்டையும் தான்!
சென்னை: லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பில் வெளியாகும் முதல் படமான ஃபைட் கிளப் படத்தின் டீசர் தற்போது வெளியானது. இந்த படத்தில் உறியடி விஜய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார்.
ஆக்ஷன் படங்களை பார்க்கத்தான் இளைஞர்கள் அதிகளவில் தியேட்டருக்கு செல்கின்றனர் என்பதை டார்கெட் செய்து தொடர்ந்து அதே போன்ற படங்கள் அணிவகுத்து ரிலீஸ் ஆகி வருகின்றன.

உறியடி விஜய்குமார்: உறியடி படத்தின் மூலம் ஆக்ஷனையும் அரசியலையும் கலந்து சொன்ன விஜய்குமாருக்கு ஆரம்பத்திலேயே பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால், உறியடி 2 படம் அவருக்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில், காணாமலே போய் விட்டார். இந்நிலையில், குறைந்த முதலீட்டில் தரமான ஆக்ஷன் படத்தை உருவாக்கிய நிலையில், அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் பேனரில் வெளியிட உள்ளார்.
ஃபைட் கிளப் டீசர்: ஸ்மோக்கிங் இஸ் இன்ஜுரியஸ் டு ஹெல்த் என பெயருக்கு ஒரு கார்டு போட்டு விட்டு படம் முழுக்க புகைப்பிடிப்பது, கஞ்சா அடிப்பது, சண்டை போடுவது என காட்டி விட்டால் அது தான் சிறந்த படம் என தொடர்ந்து இளம் இயக்குநர்கள் அதன் பின்னாலே ஓடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜுக்கு அது கை கொடுத்ததை போல நமக்கும் கை கொடுக்கும் என இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத் இந்த ஃபைட் கிளப் படத்தை இயக்கி உள்ளார்.
ஒரே புகையா வருது: படம் முழுக்கவே நடிகர்களை சிகரெட் பிடிக்க வைத்து க்ளோஸ் அப் ஷாட்டில் எடுத்ததை போலவே இந்த டீசர் முழுக்க ஹெவி ஸ்மோக்காக உள்ளது. அதை தாண்டி அடிதடி சண்டை என ஆக்ஷன் காட்சிகள் நிரம்பி வழிகின்றன. குடும்ப ரசிகர்கள் டீசரை பார்த்தாலே தம்பி அந்த பக்கம் போயிடாதே என்கிற மனநிலைக்கு வந்து விடுவார்கள் என தெரிகிறது. ஆனால், அதையெல்லாம் தாண்டி திரைக்கதை வலுவாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற கதைகள் ஜெயிக்கும்.
ரிலீஸ் எப்போ: தனுஷின் கேப்டன் மில்லர் டிசம்பர் 15ம் தேதி ரிலீஸ் என அறிவித்து தள்ளிப் போன நிலையில், அந்த தேதியை படக்குழுவினர் லாக் செய்துள்ளனர். உறியடி படத்தை போல விஜய் குமாருக்கு வெற்றிப் படமாக ஃபைட் கிளப் அமைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











