Fight Club: பயங்கரமான டைட்டில்.. லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சென்னை: தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜின் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர் என பெயர் எடுத்த லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 171 படத்தை இயக்க உள்ளார்.

lokesh kanagaraj production g squad first movie tittle fight club

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி ஸ்குவாட்: இயக்குநராக இருந்த லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் (GSquad) என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராக மாறினார்.மேலும், எனக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் என்னுடைய முதல் சில தயாரிப்புகள் அமையும். இதுவரை எனக்கு நீங்கள் எப்படி ஆதரவளித்தீர்களோ அதேபோல, இந்தப் படைப்புகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

ஃபைட் கிளப்: இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ஃபைட் கிளப் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை யமைக்கிறார். இப்படத்தில் நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் லீட் ரோலில் நடிக்கிறார்.

உறியடி விஜய்குமார்: லோகேஷ் கனகராஜ்ஜின் நீண்ட நாள் நண்பரான விஜய் குமார், உறியடி படத்தில் புரட்சியாளராக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். மேலும் இவர், தேசிய விருது போன்ற சூரரைப்போற்று படத்தில் வசன கர்த்தாவாக பணியாற்றி உள்ளார். தற்போது வெளியாகி உள்ள அந்த போஸ்டரில் சிக்ஸ் பேக்குடன் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

விரைவில்: உறியடி விஜய்குமாருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபைட் கிளப் படத்தின் கதையை சசி எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X