லியோ அப்போ எல்சியூ இல்லையா? உதயநிதி ட்வீட்டுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த விளக்கம்.. செம ட்விஸ்ட்!
சென்னை: லியோ படத்தில் இத்தனை ட்விஸ்ட்டுகளும் சுவாரஸ்யமும் இருக்குமோ இல்லையோ ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ஏகப்பட்ட ட்விஸ்டுகள் மற்றும் சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன.
நேற்று நள்ளிரவு லியோ படத்தை பார்த்து விட்டு உதயநிதி ஸ்டாலின் தளபதி அண்ணா விஜய் சூப்பரா நடிச்சிருக்காரு, லோகேஷ் கனகராஜ் இயக்கம் வேற லெவல், அனிருத் மற்றும் அன்பறிவ் தாறுமாறு என முதல் விமர்சனத்தை கொடுத்துவிட்டு கடைசியாக #lcu போட்டு இருந்தார்.

லியோ எல்சியூ என்பதை உதயநிதி அறிவித்து விட்டார் என பல செய்திகளும் மீம்களும் டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் அதற்கு கொடுத்துள்ள விளக்கம் செம ட்விஸ்ட்டாக உள்ளது.
லியோ எல்சியூ தானா? உதயநிதி ட்வீட் போட்டு ரிவீல் செய்து விட்டாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதுக்கு பக்கத்துல அவர் கண்ணடிச்ச ஒரு எமோஜியை போட்டிருந்தாரு பார்த்தீங்களா? லியோ எல்சியூவா? இல்லையா என்பது நாளைக்கு தியேட்டருக்கு போய் பாருங்க எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











