Don't Miss!
- Finance
குழந்தை, வேலை எனது அற்புதமான இரட்டையர்கள்.... எடெல்வீஸ் MD ராதிகா குப்தா!
- News
ஆபரேசன் தாமரை! நேற்று பீகார்.. அடுத்து புதுச்சேரி - பகீர் கிளப்பும் எதிர்க்கட்சித் தலைவர்
- Lifestyle
ஆண்களைப் பற்றிய இந்த ரகசியங்களை பெண்கள் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாதாம்... அது என்னென்ன தெரியுமா?
- Sports
"நீங்களே இப்படி செய்யலாமா".. இந்திய மகளிர் அணி குறித்து கங்குலி போட்ட ட்வீட்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
’ஏஜென்ட் டீனா’ தனிப் படமா டாப் ஹீரோயினை வச்சு எடுப்பீங்களா? லோகேஷ் கனகராஜின் பதில் இதுதான்!
சென்னை: விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு மட்டுமே ஒட்டுமொத்த ஸ்க்ரீன் ஸ்பேஸையும் கொடுக்காமல் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கொடுத்தது தான் இத்தனை பெரிய பாக்ஸ் ஆபிஸை அந்த படம் ஈட்டியது என்றும் ஒரு சினிமா என்றால், ஹீரோ வொர்ஷிப்பாக இல்லாமல், கதைக்கு தேவையான திரைக்கதையும், அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது தான் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படம் மூலம் கூறி உள்ளார்.
விக்ரம் படத்தில் ஏகப்பட்ட ஏஜென்ட்கள் திடீரென காட்டப்பட்டு வந்தாலும், ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் பெண்களை ரொம்பவே கவர்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த கதாபாத்திரத்தை வைத்து ப்ரீக்வெல் படம் ஒன்றை இயக்க வேண்டும் என சமீபத்தில் நடைபெற்ற விழாவில் மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் என்ன சொன்னார் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
அந்த 3 ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க மாட்டேன்...ஏன் ஜான்வி கபூருக்கு அவங்களுடன் என்ன பிரச்சனை?

சயின்ஸ் ஃபிக்ஷனுக்கு வாய்ப்பு இருக்கா
மார்வெல் மாதிரி லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ் என விக்ரம் படத்தை எடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் விழா ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்ட நிலையில், அவரிடம் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் எடுப்பீர்களா என சில மாணவிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த லோகேஷ் நமக்கு சயின்ஸ் எல்லாம் ரொம்ப வராதுங்க, அதனால் அந்த மாதிரியான ரிஸ்க்கை இப்போதைக்கு எடுக்க விரும்பல என கூறினார்.

ஏஜென்ட் டீனா படமாகுமா
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல ஏஜென்ட் டீனாவை விக்ரம் படத்தில் வைத்தது சூப்பரான ஐடியா. தியேட்டரில் அது அட்டகாசமாக வொர்க்கவுட் ஆனது என பலரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டினர். மாணவி ஒருவர் ஏஜென்ட் டீனாவை வைத்தே ப்ரீக்வெலாக ஒரு படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை யாரையாவது வைத்து எடுப்பீர்களா எனக் கேட்க, அதற்கு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் பதில்
எனக்கும் அந்த ஆசை இருக்கு, பெண்களுக்கான முக்கியத்துவமாகவே அந்த காட்சியை வைத்திருந்தேன். வரும் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு இன்னமும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வு நிறையவே வந்திருக்கு, எதிர்காலத்தில் ஏஜென்ட் டீனாவின் முன் கதைக்கு சரியான கதை தோன்றினால் நிச்சயம் பண்ணுவேன் எனக் கூறியுள்ளார்.

ஆண்ட்ரியா ஆப்ட்டா இருப்பார்
விக்ரம் படத்தில் வீட்டில் வேலை செய்து கொண்டு குழந்தையை பார்த்துக் கொண்டு இருக்கும் வேலைக்கார பெண்மணி திடீரென அடியாட்கள் குழந்தையை கடத்த வரும் சூழலில் பாயும் புலியாக மாறி பாய்ந்து பாய்ந்து அடிப்பார். அந்த கதாபாத்திரத்தை டான்ஸர் வசந்தி நடித்திருப்பார். ஏஜென்ட் டீனா படமாக உருவானால், அந்த கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா ஆப்ட்டா இருப்பார் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி 67ல் பிஸி
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, முழுக்க முழுக்க தளபதி 67 படத்துக்காக படு பிஸியாக உழைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த அன்று மாலையே அது LCU வா இல்லையா? என்பதையும் சொல்லி விடுவதாக கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். விஜய் ரசிகர்கள் எப்படி இருந்தாலும், படத்தை கொண்டாடி விடுவார்கள் என்பது வேறு கதை.