தளபதி 67 ல் விஜய்யின் ரோல் இதுதான்...லோகேஷ் கனகராஜே வெளியிட்ட மாஸ் அப்டேட்
சென்னை : விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கோலிவுட், சோஷியல் மீடியா என எங்கு திரும்பினாலும் லோகேஷ் கனகராஜ் பற்றிய பேச்சாக தான் உள்ளது.
விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து தளபதி 67 படத்தை இயக்க போகிறார் என்ற தகவல் ரசிகர்களை செம குஷியாக்கி உள்ளது.
கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக அனைத்து படங்களுமே சிறை, போதைப் பொருள் கடத்தல் கும்பல், போலீஸ் இதை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளதால் தளபதி 67 படத்தின் கதை என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தளபதி 67 அப்டேட் கொடுத்த லோகேஷ்
லோகேஷ் கனகராஜ், விஜய் மீண்டும் இணையும் தளபதி 67 படத்தை லலித்குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க உள்ளது. இதை சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கன்ஃபார்ம் செய்த லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் கதை என்ன, விஜய்யின் ரோல் என்ன என்பது பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இது தான் படத்தின் கதையா
அதன்படி, தனது அடுத்த படம் கேங்ஸ்டரை மையமாகக் கொண்ட கதை என சொல்லி உள்ளார். கேங்ஸ்டர் கதை ஒன்றை தயாரித்து வருவதாக ஏற்கனவே பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தீர்கள். அதை எப்போது இயக்க போகிறீர்கள், என்ன கதை என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போது தான் இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். அடுத்து தான் இயக்க போகும் கதை கேங்ஸ்டர் பற்றியது. அதுதான் தளபதி 67 படத்தின் கதை என்றார்.

இது செம மேட்டரா இருக்கே
இதோடு கூடுதல் தகவல் என்னவென்றால், தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உருவாக்கி உள்ள கதை விஜய்க்காக உருவாக்கப்பட்டது இல்லையாம். ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய கதையை தான் தற்போது விஜய்க்காக பயன்படுத்த போகிறாராம் லோகேஷ். தலைவர் 169 படத்தை இயக்க போகும் டைரக்டர்கள் பட்டியலில் லோகேஷ் பெயரும் அடிபட்டதால் ரஜினிக்காக மாஸாக கேங்ஸ்டர் கதையை உருவாக்கினாராம்.
Recommended Video

அதுக்கும் மேல இருக்குமாமே
கைதி, விக்ரம் படங்களிடையே ஒற்றுமை, தொடர்ச்சி இருந்ததை போல் தளபதி 67 படமும் லோகேஷின் முந்தை ஏதாவது ஒரு படத்துடன் அல்லது அந்த படத்தின் கேரக்டருடன் தொடர்பு கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தளபதி 67 படத்தில் விஜய், கேங்ஸ்டர் ரோலில் தான் நடிக்க போகிறாராம். விஜய் கேரக்டர் பிகில் படத்தில் வரும் மைக்கேல் ராயப்பன் கேரக்டர் போல் இருக்குமா என்று கேட்டதற்கு, இது அதற்கும் மேலாக இருக்கும் என லோகேஷ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதனால் அடுத்த மிரட்டலான, பிளாக் பஸ்டர் வெற்றிக்கு லோகேஷ் கனகராஜ் தயாராகி விட்டார் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications