கூலி படத்தில் வாட்ச் எதற்கு?.. டைம் ட்ராவலா?.. நான் சொல்லியே ஆகணும்.. சீக்ரெட் உடைத்த லோகேஷ் கனகராஜ்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் மிகப்பெரிய ஹைப்பை பெற்றிருக்கிறது. 1000 கோடி ரூபாய் வசூலை கண்டிப்பாக இந்தப் படம் பெறும் என்று பலரும் கூறிவருகிறார்கள். படத்தின் ட்ரெய்லர் சுமாராக இருந்தாலும் லோகி நிச்சயம் படத்தில் ஏதோ ஒரு மேஜிக் செய்துவிடுவார் என்ற நம்பிக்கை பெரும்பாலானோரிடம் இருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் போஸ்டர்களில் வாட்ச் முக்கிய பங்கு வகித்ததால் இப்படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிறது என்றும் கூறிவருகிறார்கள். இந்தச் சூழலில் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்திருக்கிறார்.

தமிழ் சினிமா மட்டுமில்லை இந்திய சினிமாவிலேயே முக்கியமான இயக்குநராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் இதுவரை இயக்கிய படங்களில் லியோ மட்டும்தான் அப்படி இப்படி என விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் அப்படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக அவரது சம்பளமும் பன்மடங்கு உயந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி லோகேஷ்: வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்த லோகேஷ் எப்போது ரஜினியுடன் இணைவார் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. விக்ரம் படம் ரிலீஸானபோதே அவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது. இப்போது அவர்கள் ஒருவழியாக கூலி படத்தில் இணைந்துவிட்டார்கள். இதில் அமீர் கான், சௌபின் சாஹிர், சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

Lokesh Kanagaraj Reveals about Coolie Movie Story here are details
Photo Credit:

ஒரு வாரத்தில் ரிலீஸ்: படம் ரிலீஸாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அடுத்த வாரம் இதே நாள் கூலி படத்தின் ரிசல்ட் என்னவாக இருக்கும் என பலருக்கும் தெரிந்துவிடும். வெளிநாடுகளில் எல்லாம் ப்ரீ டிக்கெட் புக்கிங் எதிர்பார்த்ததைவிடவும் நல்லபடியாக போய்க்கொண்டிருப்பதாகவே பலரும் சொல்கிறார்கள். படத்தின் வியாபாரமும் தயாரிப்பு தரப்புக்கு டேபிள் ஃப்ராபிட்டைதான் கொடுத்திருக்கிறதாம். எனவே நிச்சயம் இப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என்பது பலரது கணிப்பு.

என்னதான் கதை?: இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே கதை குறித்த யூகங்கள் பல வந்தன. அதில் ஒன்றுதான் டைம் ட்ராவல் கதை. ஏனெனில் போஸ்டர்களில் எல்லாம் வாட்ச்கள்தான் ஹைலைட்டாக காண்பிக்கப்பட்டிருந்தன. அதன் காரணமாகத்தான் இது டைம் ட்ராவல் கதை என்ற பேச்சு எழுந்தது. ஆனால் படத்தின் ட்ரெய்லரில் அதற்கான எந்த அறிகுறியுமே இல்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கும் பேட்டியில் இதற்கு விளக்கமளித்திருக்கிறார்.

லோகேஷின் பேட்டி: அவர் வலைப்பேச்சு வாய்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "கூலி படத்தில் வாட்ச் இருப்பதை வைத்து டைம் ட்ராவல்வரைக்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதை நான் சொல்லியே ஆக வேண்டும். இல்லையென்றால் அதற்கும் நான் நாளைக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். வாட்ச் ஃபேக்டரிதான் ஒரு தீம் பேஸ். அந்த வாட்சையே ஒரு செயின் மாதிரி உபயோகப்படுத்துவதற்கு செய்யப்பட்ட ஐடியாதான் இது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X