என்ன அந்தமாதிரி ஆளுன்னே முடிவு பண்ணிட்டீங்களா?.. செய்தியாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் பளிச் பதில்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின். கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மற்றும் சில சிறப்பு கேமியோக்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசிவரை நடிகர் விஜய் லியோ படத்தை கண்டு கொள்ளவே இல்லை. வெறும் யூடியூப் சேனல்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் கடைசியாக தற்போது செய்தியாளர்களை சந்தித்து ஒட்டுமொத்தமாக ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

மெண்டல் ஹெல்த்: அந்தப் பேட்டியில், செய்தியாளர் ஒருவர் தொடர்ந்து டார்க் மோடு படங்களை எடுத்து வருகிறீர்களே? உங்கள் மெண்டல் ஹெல்த் எப்படி இருக்கிறது என்றும் நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் ஒரு சைக்கோ போலத்தான் என்பது போன்ற கேள்வி எழுப்ப, உடனே சிரித்து விட்ட லோகேஷ் கனகராஜ், ஐயோ அப்படி எல்லாம் இல்லைங்க, அது சினிமா அதற்கும் என் ரியல் லைஃப்க்கும் சம்பந்தம் இருக்காது. நம் வீட்டில் அதிகமாக ஆதித்யா சேனல் தான் பார்ப்பேன், யூடியூப் இல் பரிதாபங்கள் வீடியோக்களை பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பேன்.
படத்தை எப்போதுமே படமாக மட்டுமே பார்ப்பேன், அதையும் சொந்த வாழ்க்கையும் கனெக்ட் செய்ய மாட்டேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.
போதைப் பொருள்: மேலும், லியோ திரைப்படம் உருவாக காரணமே மாஸ்டர் படம் தான். 'லியோ'படத்தின் டிரெய்லரில் வந்த ஆபாச வசனத்திற்கு விஜய் பொறுப்பல்ல, அதற்கு எதிர்ப்பு வந்த உடனே மியூட் செய்துவிட்டோம். கெட்ட வார்த்தை பேசியது நடிகர் விஜய் கிடையாது, லியோவில் உள்ள பார்த்திபன் கதாபாத்திரம் தான். அந்த வார்த்தை கட்டாயம் திரையில் வராது என்றும் உறுதியளித்துள்ளார்.
போதைப் பொருள் தொடர்பான கேள்விக்கு, "படத்தில் அதிகளவில் போதை மற்றும் ஆக்ஷன் காட்சிகளை காட்டுவது அதை நிறுத்துவதற்காகவே தவிர ஊக்கப்படுத்த அல்ல;
இது போன்ற விஷயங்களை விஜய் போன்ற முன்னணி ஹீரோக்கள் சொல்லும்போது அது மக்களிடம் பெரியளவில் ரீச் ஆகும் என்ற நோக்கத்தில் தான் இப்படி சொல்ல முயற்சிக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











