twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிகாந்த் பட வாய்ப்பு எப்படி மிஸ் ஆனது?.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்!

    |

    சென்னை: கமல்ஹாசனை வைத்து விக்ரம் படம் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்தின் படத்தை எப்படி மிஸ் செய்தேன் எனக் கூறியுள்ளார்.

    மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இம்மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை 380 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

    விரைவில் 400 கோடி லேண்ட்மார்க்கை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரஜினி படம் தனது கையை விட்டு நழுவ என்ன காரணம் என்று தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெளிவாக கூறியுள்ளார்.

    3டியில் உருவாகும் விக்ரம் - பா.ரஞ்சித் படம்.. டைட்டில் இதுதானா? வெளியான சீக்ரெட்! 3டியில் உருவாகும் விக்ரம் - பா.ரஞ்சித் படம்.. டைட்டில் இதுதானா? வெளியான சீக்ரெட்!

    வங்கி டு விக்ரம்

    வங்கி டு விக்ரம்

    பேங்கில் வேலை செய்து கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் தனது மனைவியிடம் தனது ஆசையை சொல்லி அவரை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு சினிமா கனவை தேடி அலைந்தார். அவ்வளவு எளிதாக அவர் இயக்குநர் ஆகி விடவில்லை. மாநகரம் படம் உருவாகவே சுமார் 6 ஆண்டுகள் ஆகி விட்டதாம். அந்த படத்திற்கு பிறகும் ஹீரோ கிடைக்காமல் மன்சூர் அலி கானை வைத்து கைதி படத்தை எடுக்க முயற்சித்தார். கடைசியில் கார்த்தி கைதி படம் பண்ணதும், லோகேஷ் கனகராஜ் மாஸ்டர், விக்ரம் என தனது வெற்றிப்பாதையை பிடித்து விட்டார்.

    கமல் ரசிகர்

    கமல் ரசிகர்

    மாநகரம், கைதி, மாஸ்டர் என லோகேஷ் கனகராஜ் இயக்கிய மூன்று படங்களிலும் கமல்ஹாசனின் ரெஃபரன்ஸ் இருந்து வந்த நிலையில், 4வது படமாக கமலின் விக்ரம் படத்தின் அடுத்த பார்ட்டையே உருவாக்குவது போல புதிய விக்ரம் படத்தை உருவாக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கமலின் யூனிவர்ஸ்க்குள் புகுந்து சினிமாவை கற்றுக் கொண்ட அவர் இன்று லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸையே உருவாக்கி விட்டார்.

    ரஜினி படம்

    ரஜினி படம்

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிக்கு படம் பண்ணவே லோகேஷ் கனகராஜுக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது. ரஜினிக்கு ஒரு அட்டகாசமான கதையையும் சொல்லி ஓகே பண்ணிட்டாராம். ஆனால், கடைசியில் கமல்ஹாசன் நேரடியாக அந்த படம் தயாரிக்கவில்லை என்பது தெரிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் வெளியேறினார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜே பதில் அளித்துள்ளார்.

    கோவிட் தான் காரணம்

    கோவிட் தான் காரணம்

    மாஸ்டர் ஆடியோ லாஞ்சை மாஸாக நடத்தி முடித்து விட்டு ரஜினி படத்தை ஆரம்பிக்க இருந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் புகுந்து விளையாடி விட்டது என்றும், அப்போது ஏற்பட்ட கேப் மற்றும் நடிகர் ரஜினி சிகிச்சைக்கு சென்றது உள்ளிட்ட விஷயங்களால் அந்த படம் டேக் ஆஃப் ஆகவில்லை என்றும், கூடிய விரைவிலேயே ரஜினியுடனும் இணைந்து பணியாற்றுவேன் என லோகேஷ் கூறியுள்ளார்.

    English summary
    Lokesh Kanagaraj reveals how he missed Rajinikanth's project in his recent interview. Lokesh Kanagaraj's Vikram movie marching towards 400 crore in box office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X