Leo Budget: ஆத்தாடி 300 கோடி பட்ஜெட்டா?.. அப்போ லியோ பிசினஸ் எப்படி இருக்கும்.. ஜெயிலருக்கு செக்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தீவிரமாக புரமோஷன் செய்ய ஆரம்பித்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், பான் இந்தியா படமாக உருவாகி உள்ள லியோ படத்திற்கு எந்தவொரு புரமோஷனும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், படத்தின் பட்ஜெட் பற்றிய தகவல்களை போகிற போக்கில் கசிய விட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இதுவரை நடிகர் விஜய் படங்கள் அதிகபட்சமாக பிகில் மற்றும் வாரிசு 300 கோடி வசூல் ஈட்டிய நிலையில், லியோ படத்தின் பட்ஜெட்டே 300 கோடி ரூபாய் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரிவீல் செய்துள்ளார்.

எல்சியூவா என்பதை இதுவரை ரிவீல் செய்யாத நிலையில், படத்தில் விஜய் டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்தார். ஓபனிங் பாடல் எல்லாம் இல்லை என ஏகப்பட்ட விஷயங்களை ரிவீல் செய்துள்ளார்.
இண்டர்வெல் பிறகு நா ரெடி பாடல்: நா ரெடி தான் வரவா பாடல் ஓபனிங் பாடலாக இருக்காது என்பது படத்தின் டிரெய்லர் மற்றும் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ள பேட்டியை பார்த்தாலே தெரிகிறது. லியோ தாஸ் யார் என்பதை போஸ்ட் இண்டர்வெலில் தான் காட்டப் போகின்றனர் என்றும் அப்போது தான் அந்த பாடல் வரும் என்றும் பார்த்திபன் விஜய்க்கு எந்தவொரு ஓபனிங் பாடலும் இல்லை என்பது தெளிவாகி உள்ளது.
300 கோடி பட்ஜெட்: இதுவரை இல்லாத அளவுக்கு விஜய்யின் லியோ படத்துக்காக லலித் குமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்திருப்பதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். கைதி படத்தின் பட்ஜெட்டே 25 கோடி தான். விக்ரம் படத்தின் பட்ஜெட் 100 முதல் 150 கோடி தான் இருக்கும் என்கின்றனர். ஆனால், விஜய்யின் சம்பளமே 180 கோடி ரூபாய் என்றும் நடிகர்களின் சம்பளமே 220 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும் 80 கோடி பட்ஜெட்டில் படம் உருவானதா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
ஜெயிலர் வசூலை முந்தும்: ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் பட்ஜெட்டே 200 கோடி ரூபாய் தான் என்றும் 525 கோடி ரூபாய் வசூலை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், லியோ படத்தின் பட்ஜெட்டே 300 கோடி என்பதால் அதன் வசூல் அசால்ட்டாக 600 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











