பிரம்மாண்டமாக உருவாகும் லோகேஷின் வீடு, ஆஃபிஸ்... பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?
சென்னை: மாநகரம் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், நான்கே படங்களில் கோலிவுட்டின் டாப் மோஸ்ட் வான்டட் இயக்குநராக கெத்து காட்டி வருகிறார்.
தற்போது விஜய் நடித்து வரும் லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ், அடுத்தடுத்து கைதி 2, விக்ரம் 2 என கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், லட்சங்களுக்குள் இருந்த லோகேஷின் சம்பளம் தற்போது பல கோடிகளுக்கும் மேல் சென்றுவிட்டது.
இதனையடுத்து தனது வீடு, அலுவலகத்தை பல கோடி பட்ஜெட்டில் ஒரே பில்டிங்கில் கட்டி வருகிறாராம் லோகேஷ்.

கோடிகளில் புரளும் லோகேஷ்
ஷார்ட் ஃபிலிம்ஸ் டைரக்ட் செய்து கோலிவுட்டில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். 5 முதல் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தனது முதல் படைப்பான மாநகரம் படத்தை இயக்கினார். இந்தப் படம் கொடுத்த வரவேற்பால், இரண்டாவது படமான கைதியில் கார்த்தியுடன் இணைந்தார். யாருமே எதிர்பாராத சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்த கைதி, லோகேஷ் கனகராஜ்ஜை கோலிவுட் டாப் இயக்குநர்களின் வரிசையில் கொண்டு சேர்த்தது. அடுத்தடுத்து மாஸ்டர், விக்ரம் படங்கள் இயக்கி மாஸ் காட்டிய லோகேஷ், லியோ இப்போதெல்லாம் கோடிகளில் சம்பளம் வாங்குகிறாராம்.

லோகேஷின் ட்ரீம் ப்ராஜக்ட்
விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர், 200 கோடிக்கும் மேல் வசூலித்தது. ஆனால், கடந்தாண்டு ரிலீஸான விக்ரம், 500 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்து தெறிக்க விட்டது. இந்நிலையில், லியோ படத்திற்காக லோகேஷுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து படங்கள் கைவசம் இருக்கும் நிலையில், ரஜினி, சல்மான் கான் ஆகியோரும் மிகப்பெரிய ஆஃபரை லோகேஷுக்கு கொடுத்துள்ளனர். அதனால் அவர் தனது ட்ரீம் ப்ராஜக்ட்டை தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஒரே பில்டிங்கில் பிரம்மாண்டம்
அதன்படி, கேகே நகரில் உள்ள ஆடம்பரமான அப்பார்ட்மெண்ட் ஒன்றை வில்லைக்கு வாங்கியுள்ள லோகேஷ், அதில் தனது வீடு, ஆஃபிஸ் இரண்டையும் ரெடி செய்து வருகிறாராம். நடிகர் விஜய் ஏற்கனவே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது பிரம்மாண்டமான அலுவலகத்தை நடத்தி வருகிறார். அதுபோன்ற ஒரு பில்டிங்கின் முதல் தளத்தில் ஆபிஸும், மேலே வீடும் ரெடி செய்து வருகிறாராம். மேலும், அந்த அலுவலகத்தில் எல்லாமே ஹைடெக்காக இருக்கும்படி பல வேலைகள் நடந்து வருகிறதாம். ஏற்கனவே போயஸ் கார்டனில் லோகேஷுக்கு ஒரு வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆச்சரியத்தில் கோலிவுட்
நான்கே படங்களில் உச்சம் சென்றுள்ள லோகேஷ், தற்போது பல கோடி பட்ஜெட்டில் வீடும் அலுவலகமும் கட்டி வருவது கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதனிடையே ரஜினி தனது கடைசி படத்திற்காக லோகேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் லோகேஷ் கனகராஜ்ஜிடம் கதை இருந்தால் கேட்டுள்ளாராம்.

லோகேஷின் இறுதி முடிவு
இதில் ரஜினி படத்தை இயக்க 35 கோடியும், சல்மான் கான் படத்தை இயக்க 50 கோடி வரையிலும் லோகேஷுக்கு சம்பளம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது விஜய்யின் லியோ ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் லோகேஷ், இன்னும் ரஜினி, சல்மான் கான் படங்கள் குறித்து முடிவு எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











