அப்போ லியோ LCUவில் கனெக்ட் ஆகிறதா?.. சமூக வலைதளங்களில் வைரலாகும் ஃபோட்டோ

சென்னை: விஜய் நடிக்கும் லியோ படமானது லோகேஷ் கனகராஜ் LCUவில் கனெக்ட் ஆகும் என கூறி சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

மாநகரம் படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த லோகேஷ்; தனது இரண்டாவது படமான கைதி மூலம் அனைவரது புருவத்தையும் உயர செய்தார். அந்தப் படத்தில் லோகேஷின் திரைக்கதை அனைவரையும் கட்டிப்போட்டது. ஒரு இரவில் நடக்கும் கதையை இதற்கு மேல் யாரும் இவ்வளவு சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லிவிட முடியாது என்பதுபோல் அந்த திரைக்கதை இருந்தது.

லோகேஷ் - விஜய் கூட்டணி

லோகேஷ் - விஜய் கூட்டணி

முதல் இரண்டு படங்களும் ஹிட் ஆனதை அடுத்து தனது மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ். அதன்படி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். இதுவரை பார்த்த விஜய்யைவிட மாஸ்டர் படத்தில் விஜய்யை வித்தியாசமாக காட்டியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அந்தப் படமும் ஹிட்டாக ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குநரானார் லோகேஷ் கனகராஜ்.

இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

விஜய்யுடன் ஹிட் கொடுத்ததை அடுத்து தனது ஆஸ்தான ஹீரோவான கமலுடன் விக்ரம் படத்தில் இணைந்தார் லோகேஷ் கனகராஜ். போதைப் பொருள் கடத்தல் கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படமானது 500 கோடி ரூபாய் வசூலித்ததோடு உலக நாயகன் கமல் ஹாசனுக்கு மிகச்சிறந்த கம்பேக் படமாக அமைந்தது.

அதுமட்டுமின்றி விக்ரம் படத்தின் திரைக்கதையானது புதுமையாகவும், லோகேஷ் ஏற்கனவே இயக்கிய கைதி படத்தின் கதாபாத்திரங்களை இதில் இணைத்து LCU என்ற முறையை உருவாக்கினார். அந்த முறையும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

லியோ - ப்ளடி ஸ்வீட்

லியோ - ப்ளடி ஸ்வீட்

விக்ரம் என்ற மெகா ஹிட்டுக்கு பிறகு மோஸ்ட் வாண்டட் இயக்குநராகிவிட்டார் லோகேஷ் கனகராஜ். அந்தப் படத்துக்கு பிறகு தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்திருக்கிறார். இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படத்துக்கு 'லியோ' என பெயரிடப்பட்டு அதன் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இந்தப் படமும் லோகேஷ் கனகராஜின் LCUவில் கனெக்ட் ஆகுமா என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

LCUவில் கனெக்ட் ஆகிறதா விஜய் நடிக்கும் லியோ

LCUவில் கனெக்ட் ஆகிறதா விஜய் நடிக்கும் லியோ

இந்நிலையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங் ஆகியுள்ளது. விக்ரம் படத்தின் மேம்படுத்தப்படாத திரைக்கதை என்ற கேப்ஷனோடு உலாவரும் அந்தப் புகைப்படத்தில், விக்ரம் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜோஸ் என்ற கதாபாத்திரம், "காஷ்மீருக்கு ஒரு கேஸ் விஷயமா சென்றபோது அமர் எனக்கு அறிமுகமானார்" என பஹத் பாசில் குறித்து கூறுவது போன்று இடம்பெற்றிருக்கிறது.

லியோ படம் காஷ்மீரில் நடக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டிருப்பதாலும், கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மற்றும் விக்ரம் படத்தில் நடித்த ஏஜெண்ட் டீனா ஆகியோரும் காஷ்மீர் சென்றிருப்பதாலும்; இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜோஸ் காஷ்மீர் சென்றதாக கூறுவது நிச்சயம் லியோ கேஸ் தொடர்பாகத்தான் இருக்கும். எனவே உறுதியாக லியோ படமானது LCUவில் கனெக்ட் ஆகும் என கூறி அந்தப் புகைப்படத்தை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X