twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் டைட்டில் சாங்கை பாடியவர் லோகேஷ் பள்ளி சீனியரா...அவரே சொன்ன செம தகவல்

    |

    சென்னை : 1986 ல் விக்ரம் படம் ரிலீசான போதும் சரி, இப்போது விக்ரம் ரிலீசான பிறகும் சரி விக்ரம் டைட்டில் சாங் தான் செம மாஸாக திரும்பின பக்கமெல்லாம் ஒலிக்கிறது.

    எத்தனை பாடல்கள் வந்தாலும் கேட்டதும் ஆட்டம் போட வைத்து, நம்மையும் அறியாமல் முணுமுணுக்க வைக்கும் பாடல், எவர் க்ரீன் பாடல் என சொல்லிக் கொண்டே போகலாம் 1986 ல் கமல் நடித்து ரிலீசான விக்ரம் படத்தின் டைட்டில் சாங்.

    கம்யூட்டரர் மூலம் பதிவு செய்யப்பட்ட முதல் பாடல் இது தான். மாஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில், கமல் தனது சொந்த குரலில் பாடிய இந்த பாடல் 1980 களில் செம ஃபேமஸ்.

    டாப் டக்கரா இருக்காரே.. இந்தியளவில் டிரெண்டாகும் அஜித்தின் ஐரோப்பா ட்ரிப் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! டாப் டக்கரா இருக்காரே.. இந்தியளவில் டிரெண்டாகும் அஜித்தின் ஐரோப்பா ட்ரிப் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

    மீண்டும் ஹிட்டான டை்டடில் டிராக்

    மீண்டும் ஹிட்டான டை்டடில் டிராக்

    இந்த படத்தின் டைட்டில், டைட்டில் டிராக் மற்றும் விக்ரம் படத்தில் கமலின் கேரக்டர் பெயர் இந்த மூன்றையும் அப்படியே தான் இயக்கிய விக்ரம் படத்திலும் பயன்படுத்தினார் லோகேஷ் கனகராஜ். 1980 களில் இளைஞர்களின் ஃபேவரைட் ஆக இருந்த விக்ரம் டைட்டில் சாங், தற்போது மீண்டும் இந்த கால இளைஞர்களின் ஃபேவரைடாகவும் மாறி உள்ளது.

    வசூல் மழையில் விக்ரம்

    வசூல் மழையில் விக்ரம்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இதை திரைத்துறையினர் கொண்டாடி வந்தாலும், விக்ரம் படத்தின் ஒவ்வொரு சீனையும் அலசி ஆராய்ந்து பல புதிய தகவல்களை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த ஆண்டில் வசூல் மழை பொழியும் படமாக விக்ரம் மாறி உள்ளது.

    விக்ரம் ஓடிடி ரிலீஸ்

    விக்ரம் ஓடிடி ரிலீஸ்

    விக்ரம் படம் ரிலீசாகி 20 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 36 நாட்களில், அதாவது ஜுலை முதல் வாரத்தில் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார்கள். இருந்தாலும் தற்போது வரை விக்ரம் படத்தை பார்த்து விட்டு உணர்ச்சி பெருக்குடன் வந்து ரசிகர்கள் தங்களின் கமெண்ட்களை கொடுப்பது கொஞ்சமும் குறையாமல் உள்ளது.

    யாரு இவர்...அப்படியே பாடுறாரு

    யாரு இவர்...அப்படியே பாடுறாரு

    அப்படி சமீபத்தில் விக்ரம் படம் பார்த்து விட்ட வந்த ஒருவர், விக்ரம் டைட்டில் சாங்கை உணர்ச்சி பூர்வமாக பாடி, படம் மரண மாஸ் என கமெண்ட் கொடுத்து விட்டு சென்றார். நடுத்தர வயதுடைய அந்த நபர் பாடிய வீடியோ சோஷியல் மீடியாவில் செம வைரலானது. இந்த வீடியோவை சமீபத்தில் பேட்டி ஒன்றின் போது டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு போட்டு காண்பிக்கப்பட்டது.

    லோகேஷ் சொன்ன ஷாக் தகவல்

    லோகேஷ் சொன்ன ஷாக் தகவல்

    ஆனால் அந்த வீடியோவை பார்த்த லோகேஷ் கூலாக, ஆமாம். நானும் பார்த்தேன். அவர் என்னுடைய சீனியர் தான். ஸ்கூல் படிக்கும் போது ஹாஸ்டலில் தங்கி இருந்தார். 10 ம் வகுப்பு படிக்கும் போது பார்த்தது. அதற்கு பிறகு இப்போது தான் பார்க்கிறேன் என்றார். இதை கேட்டு பேட்டி எடுக்க வந்தவர் மட்டுமல்ல, லோகேஷ் பேட்டி வீடியோவை பார்த்தவர்களும் ஷாக்காகி விட்டனர்.

    மொத்த ரியாக்ஷனே இவ்வளவு தானா

    மொத்த ரியாக்ஷனே இவ்வளவு தானா

    ஸ்கூல் சீனியரை கூட இன்னமும் ஞாபகம் வைத்து சொல்கிறாரே என்ற ஆச்சரியம் ஒரு பக்கம் இருந்தாலும், தனக்கு தெரிந்த ஒருவர் தனது படத்தை பார்த்து விட்டு இப்படி உணர்ச்சிவசப்பட்டு பாராட்டுகிறார். ஆனால் மொத்தமே இவரோட ரியாக்ஷன் இவ்வளவு தானா. இவ்வளவுடு கூலாக அது என்னுடைய சீனியர் என்கிறாரே என்று சொல்கிறாரே என கேட்டு வருகின்றனர்.

    English summary
    Recently one of the fan sung Vikram title track song with so emotionaly after watching Vikram movie. This video goes viral in social media. In his recent interview, this video was shown to Lokesh Kanagaraj. But he said that the fan was his school days senior in very cool manner.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X