லோகேஷ் கனகராஜுக்கு மறக்க முடியாத பாராட்டு இதுதான்.. பெற்றோர் சொன்ன தகவல்!
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் நிலையில் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ளார்.
சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு குறித்து அவர்களது பெற்றோர் தனியார் யூடியூப் சேனல் மூலம் மனம் திறந்து பேசியுள்ளார்.

குறும்படங்கள் மூலம் இயக்குநராக
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படங்களும் அதிரடியான ஆக்ஷன் கதைகளில் வெளியாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குநராக ஜொலித்துக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் மாநகரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். எந்த ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணிபுரியாமல் குறும்படங்கள் மூலம் மட்டுமே இயக்குநராக ஆனது பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது

கமர்ஷியல் மசாலாக்கள் இல்லாமல்
இந்த நிலையில் மாநகரம் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றது. வழக்கமான கமர்ஷியல் மசாலாக்கள் எதுவும் இல்லாமல் குத்தாட்ட பாடல்கள் , கதாநாயகி என எதுவும் இல்லாமல் வெளியான கைதி படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடித்து மிரட்டியிருப்பார். அதிரடியான ஆக்ஷன் கதை களத்தில் வெளியான கைதி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கப்பட்ட இந்த படம் ரஷ்யா மற்றும் சீன மொழிகளிலும் வெளியாகி அங்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்
விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சக்கைபோடு போட்டது தொடர்ந்து அடுத்ததாக தனது கலையுலக குருவான கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க விக்ரம் படத்தை இயக்கினார். கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து இருக்க மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வந்த விக்ரம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் பிரம்மாண்ட வெற்றி பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் செய்து வருகிறது

மிகச் சிறந்த இயக்குனர் விருது
அடுத்ததாக விஜய்யுடன் மீண்டும் இணைய உள்ள லோகேஷ் கனகராஜ் குறித்து அவரது பெற்றோர் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசியதாவது லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு 2021 ஆம் ஆண்டு மிகச் சிறந்த இயக்குநர் என்ற விருது அறிவிக்கப்பட்டது தான் என மனம் திறந்து பேசியுள்ளனர். தொடர்ந்து வெற்றிகளின் மூலம் ஹீரோக்களின் ஃபேவரைட் இயக்குநராக உள்ள லோகேஷ் கனகராஜ் மிக விரைவிலேயே இந்திய அளவில் அனைவரும் மெச்சும் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











