காவல்துறை அதிகாரியா? அரசியல்வாதியா? விக்ரமில் ஃபஹத் பாசில் கதாபாத்திரம் என்ன… குழம்பும் ரசிகர்கள் !

சென்னை : கமல்ஹசன் நடிக்க உள்ள விக்ரம் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில் நடிக்க உள்ள கதாபாத்திரம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

இந்த தகவல்கள் அனைத்தும் இன்னும் உறுதியாகததால், அனைத்தும் ரகசியமாகவே உள்ளது.

விக்ரம்

விக்ரம்

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு கமல் நடிப்பில் உருவாகி வரும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்திற்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்க உள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஊரடங்கு முடிந்த பின்பு இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தொடங்க உள்ளன.

வில்லன் யார்?

வில்லன் யார்?

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் பிரபுதேவா அடுத்து லாரன்ஸ் நடிக்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் அப்படத்திலிருந்து விலகினார். இதையடுத்து, மலையாள நடிகர் ஃபத் ஃபாசில் தான் வில்லன் என பல தகவல்கள் மாறி மாறி வெளிவந்தன.

அரசியல்வாதியா ?

அரசியல்வாதியா ?

இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் ஃபஹத் பாசிலின் கதாபாத்திரம் குறித்து தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. சிறைச்சாலையிலிருந்து குற்றவாளிகள் வெளியே உதவும் ஊழல் நிறைந்த காவல்துறை அதிகாரியாக ஃபஹத் பாசில் நடிக்க இருப்பதாகவும், மற்றொரு தரப்பினர் ஒரு அரசியல்வாதியாக நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. காவல்துறை அதிகாரியா,அரசியல் வாதியா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

வில்லன்

வில்லன்

மாஸ்டர் படத்தில் வில்லான மிரட்டிய விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லான நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து வருவதால் அவருக்கு கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் விஜய்சேதுபதி விக்ரம் படத்தில் வில்லான நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X