Don't Miss!
- News
டெல்லியின் "டேஷர்".. யார் இந்த ஸ்வேதா செராவத்? இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம்!
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஹீரோ, வில்லனாகிறார்...வில்லன், ஹீரோவாகிறார்...என்னங்க நடக்குது இங்க?
சென்னை : தமிழ் சினிமாவில் வில்லன்கள் ஹீரோ ஆவது ஒன்றும் புதிதல்ல. சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் போன்ற பலர் வில்லனாக அறிமுகமாகி, பிறகு டாப் ஹீரோக்களாக ஆனவர்கள். ஆனால் சமீப காலமாக ஹீரோக்கள் வில்லனாகி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டைரக்டராக மாறி உள்ள லோகேஷ் கனகராஜ்,விஜய் சேதுபதி, சூர்யா என டாப் ஹீரோக்களாக இருந்தவர்களை வில்லன்களாக அறிமுகப்படுத்தி வருகிறார்.
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியையும், விக்ரம் படத்தில் சூர்யாவையும் வில்லனாக்கி உள்ளனர். விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் ரோல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. விக்ரம் படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப் பெரிய வசுல் சாதனை படைத்துள்ளது.
இந்த சமயத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் படங்களில் வில்லன் ரோலில் நடித்தவர் அர்ஜுன் தாஸ். டேவிட், சோலோ படங்களை இயக்கிய டைரக்டர் பீஜோய் நம்பியார் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க அர்ஜுன் தாஸ் ஒப்பந்தமாகி உள்ளார்.
சூர்யா
பிறந்தநாள்
காமன்
டிபி
வெளியீடு...பிரபலங்கள்
என்ன
சொல்கிறார்கள்?
இதே போல் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய ரோலில் நடித்த காளிதாஸ் ஜெயராம், இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாலிவுட் வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த படத்திற்காக காலேஜ் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சொல்லப்படுகிறது.
லேட்டஸ்ட் தகவலின் படி அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவருமே பாசிடிவ் ரோலில் தான் நடிக்கிறார்களாம். இவர்கள் இருவருமே என்ன ரோல்களில் நடிக்கிறார்கள் என்ற தகவல் விரைவில் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.இந்த படம் இந்தி மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால் மலையாளத்தில் காளிதாஸ் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரை தற்போது வில்லன ரோலில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதும், வில்லன் ரோலில் நடிக்கும் அர்ஜுன் தாசை ஹீரோ ரோலிலும் நடிக்க வைக்க நினைப்பதும் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. வித்தியாசமான முயற்சியாக இதை செய்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.