Lokesh: “நான் Agent-னு எனக்கே தெரியாது.. லோகேஷ் சின்ன பையன்னு நினைச்சேன்” விக்ரம் ஃப்ளாஷ்பேக்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் 2022ல் வெளியானது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். கமல் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக விக்ரம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்தது குறித்து சந்தான பாரதி மனம் திறந்துள்ளார்.
லோகேஷ் அப்படின்னு நினைக்கவே இல்லை
கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் தமிழில் தரமான இண்டஸ்ட்ரி ஹிட் படமாக வெளியானது விக்ரம். கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இந்தப் படம் தாறுமாறாக ஹிட் அடித்தது. இதில் கமலுடன் மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டணியே நடித்திருந்தது. விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன், செம்பன் வினோத் ஆகியோருடன் கமலின் நெருங்கிய நண்பர் சந்தான பாரதியும் நடித்திருந்தார்.

கமலின் ஆரம்பகால சினிமா பயணத்தில் இருந்தே அவருடன் ட்ராவல் செய்து வருகிறார் சந்தான பாரதி. அதுமட்டும் இல்லாமல் கமலின் குணா, மகாநதி என்ற கிளாஸிக் படங்களையும் இயக்கியுள்ளார். அதேபோல், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படங்களில் சந்தான பாரதி கண்டிப்பாக இடம்பெறுவார் என்பது எழுதப் படாத விதி. அந்நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டாகவே வலம் வந்துள்ளார்.
இதனை அவர் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விக்ரம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ள சந்தான பாரதி, லோகேஷ் கனகராஜ்ஜை நான் சின்ன பையன்னு நினைச்சேன் என ஓபனாக பேசியுள்ளார். அதாவது விக்ரம் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க வேண்டும் என கமல் அவரை அழைத்துள்ளார். பின்னர் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ஆபிஸ் சென்ற சந்தான பாரதியிடம் லோகேஷை இன்ட்ரோ கொடுத்தாராம் கமல்.
அப்போது லோகேஷ் கனகராஜ்ஜை ஏது சின்ன பையன் என நினைத்த சந்தான பாரதிக்கு, கமல் தான் அவர் இயக்குநர் என அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் சின்ன கேரக்டர் தான் என சொல்லியே என்னை நடிக்க அழைத்துச் சென்றதாகவும், ஆனால் நடித்து முடித்து படம் வெளியாகும் வரை, நான் ஒரு ஏஜென்ட் என எனக்கே தெரியாது என்றுள்ளார் சந்தான பாரதி. இந்தப் படத்தில் உப்பிலியப்பன் என்ற ஏஜென்ட் கேரக்டரில் நடித்திருந்தார் சந்தான பாரதி.
மேலும், லோகேஷ் பக்கா பிளானோடு தான் படப்பிடிப்புக்கு வருவதாகவும், கையில் ஸ்க்ரிப்ட் பேப்பர் கூட இல்லாமல் சீன்ஸ், டயலாக்ஸ் எல்லாம் சொல்லித் தருவதாகவும் சந்தான பாரதி கூறியுள்ளார். அதேபோல், எந்த டென்ஷனும் இல்லாமல் செம்ம ஜாலியாக விக்ரம் படத்தை ஷூட் செய்து முடித்தார். கமலும் படப்பிடிப்பில் கூலாக நடித்து முடித்ததை பார்த்தேன். ஆனால், விக்ரம் வெளியானதும் எனது கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடினர்.
இதனை நான் எதிர்பார்க்கவே இல்லை. லோகேஷ் சொன்ன மாதிரி சின்ன கேரக்டரா இருந்தாலும் ரீச் வேற லெவலில் இருந்தது என மனம் திறந்து பாராட்டியுள்ளார் சந்தான பாரதி. அவரது இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் சந்தான பாரதி நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











