Lokesh Kanagaraj: காசு சம்பாதிக்க கம்பெனி ஆரம்பிக்கல.. ஃபைட் கிளப் டீசர் விழாவில் லோகேஷ் பளிச்!

சென்னை: உறியடி விஜய்குமார் நடிப்பில் உருவாகி உள்ள ஃபைட் கிளப் படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் மூலம் வாங்கி வெளியிடுகிறார் லோகேஷ் கனகராஜ்.

அந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கடந்த 3 ஆண்டுகளாக தன்னை யாருமே கண்டுக்கவில்லை என உறியடி விஜய் குமார் உருகி பேசியிருந்தார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பேசும் போது தனது தயாரிப்பு நிறுவனத்தை ஏன் ஆரம்பித்தேன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

Lokesh Kanagaraj says he started G Squad Production for encouraging young talents

லோகேஷ் கனகராஜ்: களம் எனும் குறும்படத்தை இயக்கி விட்டு அதை திரையிட்டு மாநாகரம் படத்திற்காக தயாரிப்பாளரை தேடி அலைந்தேன். அப்போது என் நண்பர்கள் மட்டுமே எனக்கு உதவி செய்தனர். மாநகரம் படம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறியுள்ளார். அடுத்து தலைவர் 171 வது படத்தை இயக்க உள்ள அவர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.

ஃபைட் கிளப்: உறியடி படத்தை இயக்கி நடித்த விஜய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள ஃபைட் கிளப் படத்தை தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் ரிலீஸ் செய்ய லோகேஷ் கனகராஜ் முடிவெடுத்துள்ளார். இந்நிலையில், அந்த படத்தின் டீசர் விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் விஜயகுமார் கஷ்டப்பட்டு பேசியது தனக்கும் கஷடமாக உள்ளதாகவும், அவனை பற்றி எனக்கு தெரியும். காலை முதல் இரவு வரை சினிமாவை பற்றி மட்டுமே சிந்திப்பவன் எனக் கூறியிருந்தார்.

காசு சம்பாதிக்க இல்லை: இயக்குநராக வேலை பார்ப்பதிலேயே நன்றாக சம்பாதிக்கிறேன். என்னை போன்று இளம் திறமையாளர்கள் யாரும் பட வாய்ப்புக்காக கஷ்டப்படக் கூடாது என்பதற்காக திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கத் தான் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளேன். இதன் மூலம் வரும் வருமானத்தை தயாரிப்பு பணிகளுக்கே செலவிடுவேன் என்றும் கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ரஜினிகாந்தை வைத்து அடுத்ததாக தலைவர் 171 படத்தை வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X