Leo: முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. ஸ்டார்ட்டிங்கிலேயே சரவெடி வச்சிருக்கும் லோகேஷ் கனகராஜ்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை விஜய் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் எதிர்ப்புகளும் உருவாகியுள்ளன.

சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசாணை வெளியிட்ட நிலையில், காலை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி வெளியாக வேண்டும் என்கிற இன்னொரு அரசாணை ஏன் வெளியானது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Lokesh Kanagaraj says not to miss the first 10 minutes of Leo

லோகேஷ் பேட்டி: நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே ரிலீஸ் சமயத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அதிலும் லியோவுக்கு தொடர்ந்து தொல்லை மேல் தொல்லை தான் என்கின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்தப் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் படத்தின் முதல் 10 நிமிடங்களை பார்க்க தவற விடாதீர்கள் என்கிற அலர்ட்டை விஜய் டிவியின் நீயா நானா கோபிநாத் அவர்களின் சொந்த யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Lokesh Kanagaraj says not to miss the first 10 minutes of Leo

லியோ படம் வெற்றி அடைய திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்து வந்த லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கும் மீடியாக்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார். இந்த முறை லியோ படத்துக்கு ஆடியோ லான்ச் நடைபெறாத நிலையில், கடைசிவரை நடிகர் விஜயின் பேட்டி கூட ரிலீசாகவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்தாலும், நடிகர் அஜித்தை போல எந்த ஒரு பிரமோஷனும் இந்த முறை செய்யாமல் படத்தின் ரிசல்ட் எப்படி வருகிறது என்பதை பார்க்க முடிவுக்கு விஜய் வந்திருப்பதாக கூறுகின்றனர்.

முதல் 10 நிமிடத்தில் ஹைனா சீன்?: லியோ படத்தின் முதல் 10 நிமிஷத்தை ரசிகர்கள் யாரும் மிஸ் பண்ண கூடாது என்றும் கடந்த அக்டோபர் முதல் இந்த அக்டோபர் வரை அந்தப் 10 நிமிடத்திற்கு தான் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உழைத்துள்ளனர் என்ற லோகேஷ் கனகராஜ் சொல்லி இருக்கும் நிலையில், ஆரம்பத்திலேயே தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஹைனா உடன் தளபதி விஜய் சண்டையிடும் காட்சி தான் இடம்பெறும் என்பது கெஸ் செய்ய முடிகிறது.

Lokesh Kanagaraj says not to miss the first 10 minutes of Leo

ஏனென்றால், கிட்டத்தட்ட ஒரு வருடம் அதன் செய்திக்காக தான் உழைத்து உள்ளம் யார் லோகேஷ் கனகராஜ் இன்னொரு பேட்டியில் கூறியிருந்தார். அதை வைத்து மேட்ச் பண்ணி பார்த்தால் கண்டிப்பாக முதல் 10 நிமிஷத்திலேயே ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வரும் மேஜிக்கா ஹைனா காட்சி இடம்பெற வேண்டும் அதனைத் தொடர்ந்து தான் அன்பெனும் பாடல் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X